அரித்வாரில் திருவள்ளுவர் சிலை அமைக்க எதிர்ப்பு !

கங்கை நதியோரம் திருவள்ளுவர் சிலை திறக்க எதிர்ப்பு மாளிகையில் திறப்பு திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் குறித்து வடமாநில மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் மாநிலங்களவை பா.ச.க. உறுப்பினர் தருண் விஜய், அரித்துவார் நகரில் கங்கை நதிக்கரையில் உள்ள அரிக்கிபோடி என்ற இடத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று அறிவித்தார். அதன்படி, சிலை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து அவர், தமிழகத்தில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலையை உருவாக்கி அதை பயணமாக அரித்துவாருக்கு கொண்டு சென்றார். இதற்கிடையில், அவ்விடத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, அங்கு சிலை நிறுவ அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் சங்கராச்சாரியார் சவுக் என்ற இடத்தில் சிலையை நிறுவ ஏற்பாடு செய்தனர். இதற்கான பணிகள் கடந்த 29 ஆம் தேதி இரவு அங்கு நடைபெற்ற போது அப்பகுதியில் உள்ள இந்து மத சாமியார்கள் அங்கு சிலை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.தமிழ் புலவருக்கு இங்கு ஏன் சிலை வைக்க வேண்டும் என அவர்கள் கேள்வி எழுப்பினர். அவர்கள் அரசு அதிகாரிகள் எவ்வளவோ சமாதானப்படுத்தும் அங்கு சிலை நிறுவுதல் ஏற்க மறுத்துவிட்டார். இதனால் அங்கு சிலை நிறுவ செய்யும் முயற்சி தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து, நீண்ட அலை கழிப்பு குப் பின்.அரித்துவாரில் உள்ள உத்தரபிரதேச அரசுக்கு சொந்தமான பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகை வளாகத்தில் 12 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையை உத்திரப்பிரதேச ஆளுநர் ராம் நாயக்.கடந்த 30.ஆம் தேதி அன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேகாலயா ஆளுநர் சண்முகநாதன், பஞ்சாப் ஆளுநர் கே.எஸ்.சோலங்கி, மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், இலங்கை இணை அமைச்சர் செந்தில் தொண்டைமான் மற்றும்தமிழ் ஆர்வலர்கள் உள்பட வட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான தமிழ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

சிலை திறப்பு குறித்து பேசிய தருண் விஜய், விரைவில் சிலை நிறுவும் இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு சிலை மாற்றம் செய்யப்படும்; என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நாமக்கல்லில் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டது. ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட இந்தச் சிலைக்கு கொல்லிமலை அடிவாரத்தில் 10.50 டன் எடையில் கல் எடுக்கப்பட்டது. 20 சிற்பக்கலைஞர்கள் தொடர்ந்து 35 நாட்கள் பணியாற்றிய சிலையை உருவாக்கினார். 12 அடி உயரம் உள்ள இந்தச் சிலையின் எடை 4.50 டன் ஆகும். .

இந்து மத சாமியார்கள் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘தமிழ் புலவருக்கு இங்கு ஏன் சிலை வைக்க வேண்டும் ?’ என அவர்கள் கேள்வி எழுப்பினர்.  முழுதும் படிக்க

செய்திகள்

தமிழ் செய்திகள்

திருவள்ளுவர்

நிகழ்வுகள்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *