கதிரொளியில் கடிகாரம் – தமிழர் சிற்பக்கலையின் சிறப்புகள் : II
காலம் எதற்காகவும், யாருக்காகவும் நிற்பதில்லை ஆனால், காலத்தால் அழியாத படைப்புகள் பன்னெடுங் காலத்திற்கும் பெருமையை பறைசாற்றி வருகிறார். அந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள கோவில் ஒன்றில், கதிரொளியில் இயங்கும் கடிகாரம் இன்றளவும் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமான செய்திகள் இருந்து வருகிறது. கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் சோழர்காலத்தில் கட்டப்பட்ட சிவயோகிநாதர் சிவன் கோயில் சுற்றுச்சுவரில் இந்த கதிரொளி கடிகாரம் அமைக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 1400 ஆண்டு கால பழமையான கோவிலில் உள்ள இந்த கடிகாரத்தின் மையப் பகுதியில் அமைக்கப்பட்ட ஆணி, கதிரொளியில் பட்டு நிழலாக விழுகிறது. இந்த நிழல் விழும்பகுதிகள் காலை பகலவன் உதிக்கும் 6 மணி முதல் மாலை மறையும் 6 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்தையும் துல்லியமாக காட்டுகிறது. இந்து மத ஆகம விதிப்படி ஒவ்வொரு கோவிலிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகள் நடைபெற்று குடமுழுக்கு நடைபெற வேண்டும் ஆனால் 62 ஆண்டுகளாக இந்த கோவிலில் திருப்பணிகளும் நடக்காமல், குடமுழுக்கும் நடைபெறாமல் இருக்கிறது. இதனால் பாழடைந்த நிலையில் உள்ள கோவிலை பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள் இந்த பகுதி மக்கள். தவறாமல் காலம் காட்டும் இந்த கடிகாரத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் சோழர்காலத்தில் கட்டப்பட்ட சிவயோகிநாதர் சிவன் கோயில் சுற்றுச்சுவரில் கிட்டத்தட்ட 1400 ஆண்டு கால பழமையான கோவிலில் உள்ள இந்த கதிரொளி கடிகாரம் அமைக்கப்பட்டிருக்கிறது.
சோழர்கள்
தமிழர் சிற்பக்கலை