மலேசியாவில் தமிழ்கல்வியின் வயது 200 ஆண்டு : அஞ்சல் தலை வெளியீடு!

மலேசிய நாட்டில் ஒரு பள்ளியின் ஒரு வகுப்பில் தொடங்கப்பட்ட தமிழ்க்கல்வி கற்பித்தல் இவ்வாண்டுடன் 200 ஆண்டுகள் முழுமை பெறுகிறது. 1816 ஆம் ஆண்டு, பினாங்கு பிரிபள்ளியில் முதல் அலுவல் பூர்வ தமிழ்வகுப்பு தொடங்கப்பட்டது. அன்றுதொட்டு, இன்றுவரை தமிழ்க்கல்வி பலமாறுதல்களையும், மேம்பாடுகளையும் கண்டுசிறப்பாக மலேசிய மண்ணில் மிளிர்கிறது. மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் 200 ஆண்டுகால வரலாறு விழாக்கோலம் காண்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மலேசியத்தமிழ் அறவாரியம் முன்நின்று செய்கிறது. மலேசிய மண்ணில். தமிழ்க்கல்வியின் 200ஆம் ஆண்டு நிறைவின் பொருட்டு மலேசியத்தமிழ் அறவாரியம் அமைப்பு அஞ்சல் தலையினை வெளியிட்டு சிறப்பித்துள்ளது. நேற்று (18-08-2016) மலேசியத்தமிழ் அறவாரியத்தின் 200 ஆண்டுகள் மலேசியாவில் தமிழ்க்கல்வி எனும் அஞ்சல் முத்திரை வெளியீட்டு விழா சிறப்புற நடைப்பெற்றது.பெட்டாலிங் செயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கழகத்தின் சார்பாக அதன் கழகத்தலைவர் திரு.மதியழகன் அஞ்சல் முத்திரையைப் பெற்றுக் கொண்டார். மலேசியத் தமிழ் அறவாரியம் அமைப்பின் செயலாளர் திரு.செல்வசோதி இராமலிங்கம். தமிழ்க்கல்வி கற்பித்தல் இன்று மலேசியநாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களையும், பத்தாயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர்களையும், ஐநூற்று இருபத்தி நான்கு தமிழ்ப்பள்ளிகளையும் கொண்ட ஒரு ஆற்றலாக உருவெடுத்துள்ளமைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே வித்திட்டவர் வணக்கத்திற்குரிய ரோபர்ட்சுபார்க் அட்சிங்ச் (பி. 1782-இ. 1827) ஆவார். இவர் 1816 ஆம் ஆண்டு பினாங்க் இலவசபள்ளியை உருவாக்கினார்.தமிழ்க்கல்வி வளம் பெற உழைத்தவர்களுக்கு

நன்றி படங்கள்: திரு.செகதீசன் ஆறுமுகம்.

நன்றி:திரு.நித்தி

மலேசிய மண்ணில் தமிழ்கல்வி 200 ஆண்டுகள் முழுமையடைந்துள்ளதை முன்னிட்டு அஞ்சல்தலை வெளியிடப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *