சிங்கப்பூர் தமிழ் சிற்றிதழ்கள் : சிங்கையில் தமிழ் IV
இளையர்களிடையே எழுத்து ஆற்றலை வளர்க்க சிற்றிதழ்கள் பெரிதும் துணை நிற்கின்றன. அதுமட்டுமின்றி பல்வேறு போட்டிகளும் இதில் நடந்தப்படுகின்றன. இளம் உள்ளூர் எழுத்தாளர்கள் கண்டறிய இது பெரிதும் உதவும்.
தமிழ் அமுதம்
2) செம்மொழி.;
3) பொழில்
4)வாதினி
5) சுட்டிமயில் (சிங்கை பதிப்பு)
6) தமிழ்மணி
இது மட்டுமின்றி உள்ளூர் தமிழ்மின்னிதழ்களும் உள்ளன.இளமை தமிழ் இணையம் :சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8 மற்றும் வசந்தம் ஒளிவழி
சிங்கை ஒலி 96.8 வானொலிநிலையம் 24 மணிநேரம் தமிழ் ஒலிபரப்பைச் செய்தி கொண்டிருக்கின்றது. பலர் வெளிநாடுகளிலிருந்தும் ஒலியைக் கேட்கின்றனர். செய்திகளின் சாரம் ஒருமணி நேர இடைவேளையில் இடம்பெறும். தமிழ் பாடல்கள் மட்டுமின்றி இதர இந்திய மொழி பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றன. வசந்தம் ஒளிவழி உள்ளூர் தமிழ்நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி வருகின்றது. தமிழ்மொழி மாதத்தை ஓட்டி நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளான சொற்சிலம்பம்,சொற்போர் ஆகியவை வசந்தத்தில் ஒளிபரப்பப்பட்டு. வாயிலாகவும் வசந்தத்தை இணையம் வழி பார்க்கலாம். அண்டை நாடான மலேசியாவில் வசந்தம் ஒளிவழிக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. சிங்கப்பூர் நாளிதழ் தமிழ் முரசு சிங்கப்பூரில் இயங்கும் ஒரே உள்ளூர் நாளிதழ் தமிழ் முரசு ஆகும். தமிழவேள் கோ.சாரங்பாணி அவர்களால் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் தமிழ் முரசு நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது. உள்ளூர் செய்திகளுடன் தமிழ்நாட்டுசெய்திகளும் அதிகஅளவில் தமிழ் முரசு நாளிதழில் இடம்பெறுகின்றன. அதுமட்டுமின்றி வாரந்தோறும் மாணவர் முரசு மற்றும் இளையர் முரசு இலவச இணைப்பாக தமிழ்முரசில் மலர்கின்றது. இளையர்களின் எழுத்தாற்றலை வெளிக்கொணர இது பெரிதும் துணை நிற்கின்றது. சமூக நிகழ்வுகள் பற்றியும் தமிழ்நிகழ்ச்சிகள் பற்றியும்செய்திகள் அதிக அளவில் இடம்பெறுகின்றன. தற்போது இணையத்திலும் தமிழ்முரசை நீங்கள் படிக்கலாம். தமிழ்முரசு இணைப்பு நித்தீசுசெந்தூர்.
சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் மேற்கொள்ளும் தமிழ்வளர்ச்சிப் பணிகள். சிங்கையில் தமிழ் குறுந்தொடர் பகுதி நான்கு.
அயலக தமிழர்கள்
அயலக தமிழ்செய்திகள்
குறுந்தொடர்கள்
சிங்கப்பூரும் தமிழும்
தமிழர் பெருமை
நித்திசுசெந்தூர்