சிங்கப்பூரில் தமிழ் மொழி மாதம் : சிங்கையும் தமிழும்

2007ஆம் ஆண்டு தமிழ் மொழி வாரம் முதன் முதலில் சிங்கப்பூரில் வளர்தமிழ் இயக்கத்தால் ஆரம்பிக்கப்பட்டது. சிங்கப்பூரில் தமிழை வாழும் மொழியாக திகழ வேண்டும் என்பது தான் வளர் தமிழ் இயக்கத்தின் குறிக்கோளாக இருந்தது. ஒருவார தமிழ் கொண்டாட்டமாக ஆரம்பித்த இவ்விழா தற்போது ஒரு மாத கொண்டாட்டமாக மலர்ந்துள்ளது. ஒன்பது ஆண்டுகள் மக்களின் பேராதரவை தமிழ் மொழி விழா பெற்றுள்ளது. தொடக்கப்பள்ளி மாணவர்கள் முதல் தொடக்கக் கல்லூரி மாணவர்கள் வரை எல்லா தரப்பட்ட தமிழர்களுக்குத் தமிழ்மணம் ததும்பும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். இளைஞர்களிடையே தமிழ் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்பது தான் அதன் முக்கிய நோக்கம். இவ்வாண்டு சுமார் 40 தமிழ் நிகழ்ச்சிகள் தமிழ் மொழி மாதத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பலதரப்பட்ட தமிழ் அமைப்புகளின் ஆதரவில் தமிழ் மொழிவிழா செம்மையாக தொடர்ந்து சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. தமிழ்மொழி மாதம் காணொளிகள் தமிழோடு இணைவோம் உலகில் தோன்றிய முதல் மொழி நீயே அரிமா தமிழா தமிழா தமிழா தமிழ் பேசு (2014-ஆம் ஆண்டு பாடல் சிங்கைத்தமிழன். தமிழ் எங்கள் மூச்சாகும்(தமிழ்மொழி மாதம் 2013) சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாடு. தமிழா 2011-ஆம் ஆண்டு பாடல் இளைஞர்களிடையே தமிழ் புழக்கத்தை அதிகரிக்க வழிவகுக்கும்.  தமிழ் சிங்கப்பூரில் துடிப்புமிக்க மொழிகளில் ஒன்றாக விளக்க வைக்கும்.  இளம்சிங்கை நாட்டு எழுத்தாளர்களைக் கண்டறிய உதவும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எப்படி தமிழ் கற்றல் கற்பித்தல் முறைகளை மேம்பாடு செய்யலாம் என முயற்சிக் குறிப்பிடும்.  தமிழர்கள் ஒன்று கூடும் சூழல் உண்டாகும். நித்திசுசெந்தூர்.

சிங்கப்பூரில் தமிழ் மாதம். சிங்கையும் தமிழ் – குறுந்தொடர் தொடர்ச்சி.

அயலக தமிழர்கள்

அயலக தமிழ் செய்திகள்

குறுந்தொடர்

குறுந் தொடர்கள்

சிங்கப்பூரும் தமிழும்

சிங்கப்பூர்

தமிழர் பெருமை

நித்திஷ் செந்தூர்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *