அரிட்டாபட்டி மலைகள்
மலைகள் எப்போதுமே கம்பீரமாக தோற்றமளிக்கக் கூடியவை. அந்த கம்பீரங்களின் தோற்றம் சரியான கோணங்களில் மட்டுமே காண முடிகிறது.

மலைகளை நான் ரசிப்பது இதனாலேயே…

இந்த சிறு பாறை இங்கு எவ்வாறு வந்திருக்கும் ? என்ற கேள்வி மனதில் எழும் பொழுது புவியின் மாற்றங்களை பற்றி அறிய முடிகிறது. பூகோல மாயங்கள் எல்லாம் கண் முன்னே நிற்கின்றன… எவ்வித சாயங்கள் ஏதுமின்றி.
எது வாழ்வில் நிச்சயம் ? என்ற கேள்விக்கு இந்த சிறிய பாறைகள் நிற்கும் தொனி எனக்குள் விடையையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.

ஒவ்வொரு பாறையும் ஒவ்வொரு அழகில் லயித்திருக்கிறது… நம் மனதை வசியபடுத்துவதற்காக… வசியமானதா ???


source : kuviiyam.blogspot.com