களப்பிரர் – தமிழகத்தின் முதல் குடியாட்சி
களப்பிரர் காலம் தமிழ்வரலாறில் இருண்ட காலமாக கருதப்படுகிறது. அந்த காலம் சுமார் கி.பி 2 – 5 ஆம் நூற்றாண்டு வரையிலான காலம். தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை உட்பட ஐம்பெரும் காப்பியங்கள் மற்றும் பல சிறப்பான ஈடு இணையற்ற இலக்கியங்கள் எல்லாம் தமிழில் உருவாக்கப்பட்ட காலம் கி.மு. 1 – முதல் கி.பி. 5 – ஆம் நூற்றாண்டு வரையே. ஆனால், நாம் படிக்கும் எல்லா வரலாற்று புத்தகங்களும், அந்த காலத்தை, மட்டும் தமிழரின் இருண்டகாலம், களப்பிரர் என்ற வேறு ஒரு இனம் தமிழரை அடிமைபடுத்திய காலம் என்று ஏன் கூறுகிறது களப்பிரர் வேறு இனம் என்றால் அவர்கள் ஏன், தமிழில் இப்படிபட்ட இலக்கியங்களை படைக்க வேண்டும் அல்லது படைக்க உதவ வேண்டும். உண்மையில் நடந்தது என்னவென்று பார்ப்போம். கி.பி. 1 ஆம் நூற்றாண்டு மூவேந்தர்களின் ஆட்சி கிட்டத்தட்ட முடிவை நெருங்கிய காலம். அந்தகாலகட்டத்தில் பெரும்பான்மையான மக்கள் கொண்டிருந்த வழக்கம், முன்னோர் வழிபாட்டுமுறையான நடுகல் வழிபாடு(போரில் இறந்த முன்னோருக்கு கல்நட்டு வழிபடுதல்) மற்றும் சாத்தன் வழிபாடு (போரில் இறந்த முன்னோரில் குதிரை ஏறி போர் புரிந்தவர், குதிரை வைத்திருந்த வீரன் சிறுவசதியான குடும்பமாக இருப்பர், அவர்கள் சிறுகோயில் கட்டி வழிபட்டனர்), இன்றும் நெல்லை குமரி மாவட்டங்களில் பல சாதிகளை சேர்ந்தவர்கள் பங்குனி மாதம் உத்திரம் நாளில் தங்கள் குடும்ப சாத்தான் கோயிலுக்கு சென்று வழிபடுவர். அதாவது அவர்கள் பல சாதிகளை சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் மூத்த முப்பாட்டன் ஒருவனே என்று பொருள் இந்தகாலங்களில் பாண்டியருக்கும், சோழர்களுக்கும் பிராமண மோகம் பிடித்து ஆட்டிய காலம், எல்லா நேரமும் பார்ப்பனருடன் சேர்ந்து யாகம் வளர்ப்பதே வேலையாக இருந்தனர், தங்களை மற்றவரை விட சிறப்பாக காட்டிகொள்ள முனைந்தனர். இதில் இருவர் சேரவில்லை, ஒருவர் சேர மன்னன் செல்வக் கடுங்கோவாழியாதன், இவர்தான் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகளின் தந்தை, இவர் மகனே கண்ணகிக்கு சிலையை எடுக்க இமயமலை சென்ற இமயவரம்பன் சேரன் செங்குட்டுவன். மற்றொருவர் காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன், இவன் கரிகால் சோழனுக்கும், ஈழத்து இளவரசிக்கும் பிறந்தவன் அதே நேரத்தில் இந்த பிராமணிய மோகத்தில் மூழ்கி திளைத்த பாண்டியன் பெயர், பல்யாக சாலை முதுகுடுமிபெருவழுதி, சோழனின் பெயர், ராஜசூயயாகம் வேட்ட பெருநற்கிள்ளி. இவர்களின் பெயரே இவர்களின் செயலை நமக்கு புரியவைக்கும். இவ்விருவரும் கணக்கில்லா விளைநிலங்களை பார்ப்பனருக்கு தானமாக கொடுக்க, வேளாண் குடிகளான பொதுமக்களின் மனக்கசப்பிற்கு ஆளானார்கள். ஏனெனில் நிலம் பார்ப்பனருக்கு மன்னன் கொடுத்தால், அங்கே விவசாயம் செய்து வந்த விவசாயி நிலத்தை காலிசெய்து கொண்டு எங்காவது கூலி வேலைக்குதான் போக வேண்டும், அல்லது அந்த நிலம் பெற்ற பிராமணரிடம் கூலிவேலை செய்ய வேண்டும் முடிவு மக்கள் புரட்சி, தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும், மக்கள் தமக்குள்ள ஒருதலைவனை தேர்ந்தெடுத்து, அவன் தலைமையில், அரசனையும் அவனது படைகளையும்;எதிர்த்து போராட தொடங்கினர், போராட்டத்தின் இறுதியில், பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி அச்சுதன் என்ற வேளாண்குடி தலைவனால் கொல்லப்படுகிறான். ராஜசூயயாகம் வேட்ட பெருநற்கிள்ளியும் கொல்லப்படுகிறான், அவனை வென்ற தலைவன் பேர் தெரியவில்லை. இதில் உற்றுநோக்க வேண்டியது என்னவென்றால், இந்த மக்கள் புரட்சிகாஞ்சிலும், சேரநாட்டிலும் நடக்கவில்லை. இதுவே அரசர்களை எதிர்த்து நடந்த உலகின் முதல் மக்கள் புரட்சி, நமக்கு இந்த காலம் இருண்டகாலம் என்று பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்படுகிறது
உண்மையில் அவர்கள் களப்பிரர் அல்ல, களப்பரர் – களபறையர், வேளாண் களத்தில் பணி செய்தவர். இந்த புரட்சிக்கு பின் அவர்கள் பலஊர்களை தலைமையாக கொண்டு அந்த பகுதிகளை ஆட்சி செய்தனர், உண்மையான மக்களாட்சி தான் அவர்கள் செய்தது, அவர்கள் பிராமணருக்கு மக்கள் வரிப்பணத்தை செலவு செய்யாமல், புலவர்களுக்கு பொருள் உதவி செய்து, பல தமிழ் இலக்கியங்களை உருவாக்க உதவினர்.முக்கியமான களப்பிர குடியரசு தலைவர்கள் – ஆதாரம் இலங்கை மகாவம்சம்
1. பாவுத்திரை -திரையன்
2. வேங்கடம் -புள்ளி
3. மிலாடு-காழிமலையன்
4. தொத்திமலை -வெல்கெழுநல்லிக்கோன்
5. முதிரமலை – இளங்குமணன்
6. நடுநாடு – இடக்காலி
7. எருமையூர் – ஆய்வியங்கோவே
8. இடைகழினான்
9. அச்சுதாவிகரந்தன். சேடிவல்லவன்
ஆரியவருகைக்கு பின் மக்களுக்கு அவர்களை போல மதம் சார்ந்த கொண்டாட்டங்கள் தேவைப்பட்டதால், அன்புநெறி போதித்த சமண மற்றும் பவுத்த மதங்களை ஏற்றுகொண்டு, பல கொண்டாட்டங்களையும் விழாக்களையும் ஏற்படுத்தினர். இவர்களின் ஆட்சி கி.பி 220 தொடங்கி கி.பி 550 வரை சுமார் 300 வருடங்கள் நடந்தது, பெரும்பாலும், தனி நகர்ப்புற ஆட்சியாகவே இருந்த்தது, பெரிதாக யாரும் அடுத்த நாட்டை பிடிக்கவேண்டும் என்று அலையவில்லை. மக்கள் அமைதியாக வாழவழிசெய்தனர்.கி.பி. 300-ல்பாரசீகத்திலிருந்து வந்து தொண்டை மண்டலத்தில் குடியேறிய பல்லவர்கள் சுமார் கி.பி 400-ல் சிம்ஹவிஷ்ணு பல்லவன்காலத்தில் காஞ்சியின் ஆட்சியை கைப்பற்றினர். மகேந்திர பல்லவன் (கி.பி600) எல்லா களப்பிர பகுதிகளையும் கைப்பற்றி ஒருங்கிணைந்த பல்லவ சாம்ராச்சியத்தை உருவாக்கினான். இந்த பல்லவர்களும் முதலில் பவுத்தமத்தை பின்பற்றினாலும், பிற்காலத்தில் மகேந்திர பல்லவன் காலத்தில், சைவ சமயத்துக்கு மாறினார், ஞானசம்பந்தர் என்ற பார்ப்பனர் மூலம் மீண்டும் பார்ப்பனர் பலம் பெறலானார்கள் இம்முறை பார்ப்பனர் யாகத்துக்கு முதலிடம் கொடுப்பதை விட்டு விட்டு களப்பிரர் இலக்கியம் மூலம் பவுத்தம், சமணம் வளர்த்த முறையை பின்பற்றி பக்தி இலக்கியம் என்று சிவனின் அற்புதங்கள் திருவிளையாடல்கள், என்று தங்கள் வழிமுறையை மாற்றிக்கொண்டனர் தமிழகத்தில் வருணா சிரம முறை வலுவாக காலூன்ற தொடங்கியது இந்த 7-8 ஆம் நூற்றாண்டு காலக்கட்டமே ஆக மொத்தத்தில் களப்பிரர்காலம், தமிழரின் இருண்டn காலம் அல்ல பார்ப்பனரின் இருண்ட காலம் உண்மையில் பொற்காலம் கிருட்டிணவேல்
களப்பிரர்காலம் தமிழகவரலாற்றில் இருண்ட காலம் என்றழைக்கப்படுகிறது உண்மையில் இது இருண்ட காலமா இல்லை இருட்டடிக்கப்பட்ட காலமா?