விசயநகர பேரரசும் – திருப்பதி கோயிலும் : சில உண்மைகள்
திருப்பதி கோயிலுக்கும் விஜயநகர பேரசுக்கும் உள்ள சம்பந்தம், அதன் பின்னணியில் இருந்த ஒரு சுவையான காதல்கதை பற்றியது இந்த பதிவு . அந்தகாதல் இன்றைய கோயிலின் வரலாற்றையே மாற்றியிருக்கும். விஜயநகரபேரரசு உண்மையில் பார்த்தால் ஒரே மன்னர் வம்சம் கிடையாது, அது 1336 – 1485 வரை சங்கமவம்சம், 1485-1491 வரை சாலுவ வம்சம், 1491-1542 வரை துளுவ வம்சம் மற்றும் 1542 – 1646 வரை அரவிடு வம்சம் என 4 வம்சங்களால், சுமார் 310 வருடங்கள் விஜநகரத்தை தலைநகரமாக கொண்டு ஆளப்பட்டது. இதில் நம் கதாநாயகன் மன்னன் கிருஷ்ணதேவராயன், இவரது தந்தை நரசநாயகன், உண்மையில் தெலுங்கு தாய்மொழியாய் கொண்டவர் இல்லை,கர்நாடகத்தில் (தற்போதைய கூர்க்) துளு என்ற மொழியை தாய்மொழியாய் கொண்டவர், அவர் தலைமை தளபதியாக வேலை பார்த்த கடைசி சாலுவவம் சமன்னனான நரசிம்மராயனுக்கு வாரிசு இல்லாத காரணத்தால் மன்னன் ஆனார். நரசநாயகனுக்கு மூன்று மகன்கள், முதலாமவன் வீரநரசிம்மராயன் மனைவிக்கும், இரண்டாமவன் கிருஷ்ண தேவராயன், மூன்றாமவன் அச்சுதராயன், இருவரும் வழக்கம் போல ஆசைநாயகிக்கும் பிறந்தவர்கள். நரச நாயகன், இறந்த பின் வீரநரசிம்மராயன் மன்னன் ஆன பின், தம்பியின் புகழ்மக்களின் பத்தியில் பரவுவதை ஏற்க முடியாமல், கிருஷ்ண தேவராயனை குருடனாக்கி விட்டால் தனது 8 வயது மகனுக்கு பட்டம் ஏற எந்த தடையும் இருக்காது என ரகசியமாக முயற்சி செய்ய, இதை மனம் ஏற்காத மந்திரி திம்மண்ணா (என்ற) அப்பாஜி, கிருஷ்ணதேவராயனை ரகசியமாக தப்புவித்து, இரண்டு ஆட்டு கண்களை மன்னனிடம் காட்டி ஏமாற்றிவிடுகிறார்.
தப்பி சென்ற கிருஷ்ணதேவராயன், பல ஊர்களில் மாறுவேடத்தில் சுற்றித்திரிகிறான். அந்த காலகட்டத்தில் ஒரு கிராமத்தில், ஊர்பெயர்தெரியவில்லை, மைசூருக்கு அருகில் என்பார்கள், ஒரு அழகியநாட்டிய பெண்ணின் மீது காதல் கொண்டு அவளோடே வாழ்ந்து வருகிறான், சிலமாதங்களில் நோய்வாய்ப்பட்டு இருந்த அண்ணன் வீரநரசிம்மராயன் இறந்துவிட, அவன் மகன் 8 வயது சிறுவன் என்பதால், மந்திரி அப்பாஜி (முதலில் கிருஷ்ண தேவராயனை தப்பிக்க வைத்தவர்) கிருஷ்ண தேவராயனை தேடி வந்துஅழைத்து சென்று மன்னனாக்குகிறார். மன்னன் ஆனவுடன் கிருஷ்ணதேவராயன் செய்த முதல் வேலை அண்ணன் மகனை கொன்றது தான். ஆனால் போகும் பொது தனகாதலியிடம் விரைவில் வந்து மணந்து கொண்டு அவளை பட்டதுராணி ஆக்குவேன் என உறுதி அளிக்கிறான். இது தெரிந்த அப்பாஜி முதல் வேலையாக தன் ஆட்களிடம் அவளை கொன்று விடகட்டளையிட்டு விட்டுத்தான் போகிறார், ஆனால் இளகிய மனம்படைத்த ஒரு நல்லவீரன் அவளை தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேவதாசியாக விற்று விடுகிறான். அதாவது விபச்சார தொழிலுக்கு விற்றுவிடுகிறான். மன்னன் ஆனா கிருஷ்ணதேவராயன், அண்டை நாட்டு அரசியல் பகை காரணங்களுக்காக 4 பெண்ணைகளை திருமணம் செய்கிறான், அவர்களில் திருமலா தேவியை பட்டத்துராணியாக அறிவிக்கிறான், இருப்பினும் தன் காதலை மறக்காமல் ஆட்களை அனுப்பி காதலியை தேடிக்கொண்டே இருக்கிறான். கடைசியாக அவள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருப்பதை கண்டுபிடித்து, அங்கே செல்கிறான். ஆனால் அவனது ராஜகுரு வியாச தீர்த்தர், அரசன் தேவதாசியை மணக்க முடியாது அவள் கடவுளுக்கு அர்பணிக்கப்பட்டவள் என எதிர்ப்பு தெரிவிக்கிறார். சிறிது யோசனைக்கு பின் கிருஷ்ண தேவராயன், உங்களால் முடியாது என்றால் விட்டு விடுங்கள், நான் வைணவ மதத்திலிருந்து சைவமதத்திற்கு மாறிவிடுகிறேன், உங்களுக்கு சீர் செய்து பெருமாள் கோயில் கட்டிதருவதாக சொன்ன திருப்பதி மலைகோயிலை சிவன்கோயிலாக கட்டி சைவமதத்தினருக்கு கொடுத்து விடுகிறேன் என்றான். திடுக்கிட்டு போன ராஜ குருவியாசதீர்த்தர், ஒருநாள் அவகாசம் கொடுங்கள் ஏதேனும் செய்ய வழி இருக்கிறதா என்று பார்க்கிறேன் என்று சொல்லிச் சென்றார் மறுநாள் தான் வேடிக்கை, அல்லது பார்ப்பன திருட்டு தந்திரபுத்தி, அரசனை சந்தித்த ராஜ குரு, நீங்கள் அப்படியெல்லாம் சைவமதத்துக்கு போகவேண்டாம், நாங்களே வழி கண்டுபிடித்துவிட்டோம், ஒரு பெண்ணை தேவதாசி ஆக்கும்போது, அந்தகோயிலின் பார்ப்பன பூசாரி தான்அவளுக்கு தாலிகாட்டுவான், அப்படிகட்டும் போது, ஒருவாளை அவளின் கணவனாக அடையாளம் சொல்லி அந்தவாளின் சார்பாக தான் அவளுக்கு தாலிகட்டுவான், அதன்பின் தான் அவள் ஒரு தாசியாக எல்லோருக்கும் பொதுவாக மாறுவாள், எனவே அந்த வாளைஎடுத்து உடைத்து விட்டால் அவளுக்கு கணவன் இறந்தவன் ஆகிவிடுவான், அதன் பின் நீங்கள் அந்த பெண்ணை மணந்து கொள்ளலாம் என்று ராஜகுரு வியாச தீர்த்தர் கூறினார். பின்னர் ராஜகுரு சொன்னது போல எல்லா சாங்கியத்தையும் செய்த மன்னன் கிருஷ்ணதேவராயன், விபச்சார வாழ்க்கைக்கு கொடூரமாக தள்ளப்பட்ட தன் காதலியை திருமணம் செய்து, அவளை, விஜய நகரபேரரசின் முதல் பட்டத்து ராணியாகவும், திருமலாதேவியை இரண்டாம்பட்டத்து ராணியாகவும், அறிவித்தான். அதன்பின் திருப்பதி கோயிலுக்கு பல தானங்கள் செய்தான், கடைசியாக, தன் இருபட்டத்து ராணிகளுடன் தன் சிலையையும் சேர்த்து மூன்று பேரும் அங்கு வணங்குவது போலசிலை செய்து வைத்தான்.
இன்றும் திருப்பதி நீங்கள் சென்றால் இவர்கள் மூவரின் வெண்கலசிலையை பார்க்கலாம், ஒரு ஆள் உயரம் இருக்கும் மூன்று சிலைகளும்.பெயர்களும்எழுதியிருக்கும், கிருஷ்ணதேவராயன், சின்னமாதேவி, திருமலாதேவி என்று. அதில்சின்னமாதேவியின் சிலையின், இரண்டு தோள்களிலும் சங்குசக்கரசின்னம் இருக்கும்.(நம்மில் 40 வயதுக்கு மேற்பட்டவர்க்கு அம்மை தழும்பு இருக்கும் இடத்தில்) அந்தகாலத்தில் தேவதாசியாக ஒரு பெண்ணை கோயிலுக்கு தந்து அல்லது விற்றுவிட்டால் அவள் அந்த கோயிலிலிருந்து தப்பி ஓடிவிட்டாலும் அவளை மற்ற ஊரில் அடையாளம் கண்டு கொள்ள, சிவன்கோயில் தாசிக்கு இருத்தோளில் திரிசூலமும், விஷ்ணுகோயில் தாசிக்கு சங்கு சக்கிரமும் அடையாளமாக சூடுவைக்கப்படும். இதில் வேடிக்கை என்னவென்றால், திருப்பதிகோயில்உண்மையில்ஒருபவுத்தகோயில், அந்த கடவுளின் பெயர் மலையப்பன், மலையப்பன் ஒரு பவுத்ததுறவி, இன்றும், இலங்கையிலிருந்து புத்ததுறவிகளும், ஏன் அந்தநாட்டு ஜனாதிபதி வரை எல்லா பவுத்தரும் அங்கு வந்து வணங்கி செல்வது அதனால் தான். பின் ஒரு பவுத்ததுறவி ஏன் இந்துகோயிலுக்கு வர வேண்டும் என்று எண்ணி பாருங்கள் பாலாஜி (குழந்தை), வெங்கடாசலபதி(வேங்கட மலையின் தலைவன்), வெங்கடேஸ்வரன்(வேங்கடத்தின் கடவுள்), ஏழுமலையான்(ஏழுமலைகளை சேர்ந்தவன் அல்லது உரிமை உடையவன்), ஸ்ரீனிவாசன் (மரியாதைக்கு உரியவன் வாழ்விடம்), கோவிந்தன் (பசுவின்விந்தில் இருந்து பிறந்தவன், பசுவுக்கு எப்படி விந்து வரும் என்று கேட்டால் நீங்கள் தேசத்துரோகியாக கருதப்படுவீர்கள்) சேஷாத்திரி(மலைகளில் சுற்றி அலைபவன் ஆக இந்த பெயர்கள் எதுவுமே மஹாவிஷ்ணுவை குறிக்கும் பெயர்கள் அல்ல (முதலில் மலைக்கும் மஹாவிஷ்ணுவுக்குமே எந்த சம்பந்தமும் இல்லை) எல்லா பெயர்களும் மலையப்பர் என்ற பவுத்த துறவியின் காரணப்பெயர்கள். கிருஷ்ணதேவராயன், இந்த கோயிலை, வைணவ பார்ப்பனர்வசம் ஒப்படைத்தாலும், பெருவாரியான மக்கள் மலையப்பசாமி என்றே வணங்கியதால் அதை மாற்றவில்லை. இன்றும் திருப்பதிகோயில் கடவுளின் அதிகாரப்பூர்வமான பெயர்மலையப்பசாமி தான். ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து தனகாதலியை மீட்ட கிருஷ்ண தேவராயன் , ஆண்டாள் எழுதிய திருப்பாவை நூலை அமுக்தமால்யதா என்றபெயரில் தானே தெலுங்கில் மொழி பெயர்த்தார் என்பது ஒரு சிறப்புசெய்தி.
திருப்பதி கோயிலுக்கும் விஜயநகர பேரசுக்கும் உள்ள சம்பந்தம், அதன் பின்னணியில் இருந்த ஒரு சுவையான காதல் கதை மற்றும் வழக்கமான பார்ப்பன புரட்டும் பற்றியது இந்த பதிவு
திருப்பதி
பதிவுகள்
வரலாற்றுக் குறிப்புகள்