இராசபக்சேவின் வருகையை எதிர்த்து மலேசியத் தமிழர்கள் கொந்தளிப்பு !

வெள்ளி ராசபக்சேவின் மலேசிய வருகையைக் கண்டித்து மலேசியாவின் ஈப்போ உட்பட பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மேலும் ராசபக்சேவிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று ம இகா இளைஞர்பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. காவல்துறையிலும் புகார் அளித்துள்ளது. கோலாலம்பூர்.; மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்தராஜபக்சேவிற்கு எதிராக மலேசியாவில் வாழும் தமிழர் சமுதாயமும், அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் பலத்த கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

தமிழர்களை கொன்று குவித்த மகிந்த ராஜபக்சேவிற்கு நமது மலேசிய அரசாங்கம் முற்றிலுமாக தடைவிதிக்க வேண்டும். மூவின மக்கள் வாழும் இந்த திருநாட்டில் ராசபக்சே போன்றவர்கள் வருவதும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைக்கு ஒப்பானது. இதனைக் கண்டித்து வெளிநாட்டு விவகாரங்களுக்கான சிறப்பு செயலாளர் டத்தோ முகமட்அசிசான் அவர்களிடம் கோரிக்கை மனு ஒன்றைக் அளித்திருக்கின்றோம். மேலும் இலங்கை தமிழர்கள் பிரச்சனையின் தீவிரத்தை அரசாங்கம் உணர வேண்டும். அதோடு ராசபக்சேவை இந்தநாட்டிற்குள். நுழையா வண்ணம் தடை விதிக்க ஆவண செய்ய வேண்டும் எனவும் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தியுள்ளதாகவும் ,மஇகா தேசிய இளைஞர் பகுதியின் செயலாளர் அர்விந்த் கிருட்டிணன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். இசுரேல் பிரச்சனைக்கு ஒப்பானது இலங்கைத் தமிழர் பிரச்சனை. இன வகையாக தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள். பிரான்சு நாட்டில் ராசபக்சே நுழையமுடியாது. அவருக்கு எதிராக கைது ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜ.நா சபையிலும் இவர் மீதான குற்றத்திற்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் இவரை நாட்டிற்குள் அழைத்து வந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கலாமா என்றும் அர்விந்த் கிருட்டிணன் கேள்வி எழுப்பியுள்ளார். ஈப்போவில் ஆர்ப்பாட்டம்

மஇகா, ஜசெக, ஐபிஎப் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமான தமிழ் ஆர்வலர்களும் லிட்டல் இந்தியா வளாகத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் இந்தக்கூட்டத்தில் உரையாற்றினார். ராசபக்சேவின் ஆட்சிகாலத்தில் நிகழ்ந்த போர்ப்படை. அட்டூழியங்கள், தமிழர்களின் படுகொலைகள் ஆகியவற்றை உலகநாடுகளை கண்டித்துகிட்டத்தட்ட அவரை ஒரு போர்க்குற்றவாளியாகக் கருதும் நிலையில், மலேசியாவுக்குள் அனுமதித்தது மிகப் பெரியதவறு என்று அவர்கள் அரசாங்கத்தைக் கண்டித்தனர். உலகத்தமிழர்கள் ராசபக்சேவை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். மலேசியா வாழ்தமிழர்கள் மனதைப்புண்படுத்தும் வகையில் அரசாங்கம் இப்படியொரு காரியத்தை செய்திருப்பதை ஏற்க முடியாதுஅவர்கள் சாடினர். காவல்துறையில் புகார் போர்க்குற்றவாளி மகிந்தாராசபக்சே மலேசியாவில் நடக்கும் மாநாட்டுக்கு வருகையளிப்பதை எதிர்த்து மஇகா இளைஞர்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்களின் கொலைக்குகாரணமா தமிழின கொலையாளி மகிந்தாராஜபக்சே மலேசியாவிற்குள் வரக்கூடாது, சம்பந்த மாநாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரி இளைஞர் பிரிவு போலீசில் புகார் செய்துள்ளது. அப்புகாரில், தமிழர்களைக் கொன்ற மகிந்தாவின் மலேசிய வருகை, மலேசிய தமிழர்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதாய் அமைந்துள்ளது. எனவே மகிந்தாவின் வருகையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் பிரிவுமட்டுமின்றி பல அரசு சாரா இயக்கங்களும் பொதுமக்களும் மகிந்தா வருகையை எதிர்த்து போலீசில் புகார்அளித்துள்ளன. இதனை அடுத்து, இன்று காலை புத்ரா உலக வாணிப மையத்திற்கு முன்புறம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. புத்ரா உலக வாணிபமையத்தில் நடைபெறும். ஆசிய பசிபிக்நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அனைத்துலக மாநாட்டில் இவர் கலந்துகொள்ள விருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு டத்தோகோகிலன் பிள்ளை அவர்கள் உள்துறை துணை அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் அப்போதைய மஇகா இளைஞர் பகுதித்தலைவர் டத்தோடி.மோகன் அவர்களின் தலைமையில் பெரிய அளவில் போராட்டம் நடத்தி, கோரிக்கை மனு அளித்து, இலங்கைத் தமிழர்களின் பிரச்சனையை. எடுத்துரைத்து ராசபக்சேவை இந்தநாட்டிற்குள் நுழைய விடாமல் மலேசியத் தமிழர்கள் தடுத்தது குறிப்பிடத்தக்கது.

இராசபக்சேவின் மலேசிய வருகை மலேசியத் தமிழர்களிடையே கடும்கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழர்

தமிழர் செய்திகள்

தமிழ் செய்திகள்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *