திருச்சி மாணவர்கள் நிகழ்த்திய தாய்த்தமிழின் முதலெழுத்து உலக சாதனை !

தாய்த்தமிழின் முதலெழுத்தான அ எனும் உயிரெழுத்தை 7100 மாணவ மாணவிகள் அழகுற அமைத்து உலக சாதனை படைத்துள்ளனர்.

ஆகத்து 30 ஆம் தேதி காலை திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள தியாகேசர் ஆலை பள்ளிவளாகத்தில் கின்னசு உலக சாதனைக்காக 7100 பள்ளி மாணவர்கள் பங்கேற்று தமிழ் எழுத்து வடிவில் நின்று சாதனை படைத்தனர்… மாணவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் எழுந்து நின்று கையில் வைத்திருந்த மஞ்சள் நிறஅட்டையை உயர்த்திப் பிடித்ததை என்ற எழுத்து பிரமாண்டமாக தெரிந்தது.சுமார் 5 நிமிடம் அட்டையை கையில் பிடித்தபடியே கின்னசு சாதனைக்காக நின்றனர்.மேலும், 40 திருக்குறளை வாசித்தனர். இந்நிகழ்ச்சியில் சௌமா பள்ளி மாணவர்கள் 2000 பேர் கலந்து கொண்டனர். இதன்மூலம் மிகுந்த எண்ணிக்கையிலான மனிதர்களால் அமைக்கப்பட்ட ஒருமொழியின் ஓரெழுத்து உலகளாவிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியினை மாவட்ட. மற்றும் மணவை சுழற்சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வு கின்னசு, லிம்கா உலக சாதனைப் பட்டியலில் நிச்சயம் இடம் பெறும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்தனர். இதற்கு முன்வரை சூன்மாதம் 22 ஆம்தேதி அமெரிக்காவில் 2166 பேர் சேர்ந்து எனும் ஆங்கில எழுத்தை உருவாக்கிய தேசாதனையாக இருந்தது.ஆனால் தமிழின் முதல் எழுத்தான வடிவிலான எழுத்தில் 7,100 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

தாய்த்தமிழின் முதலெழுத்து ‘ அ ‘ மாணவ மாணவிகளால் அழகுற அமைத்து உலகசாதனை படைக்கப்பட்டது

சாதனை

செய்திகள்

தமிழர் செய்திகள்

தமிழ்

தமிழ்செய்திகள்

தமிழ்நாடு

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *