இளைஞர்கள் ஒன்றிணைந்து சீரமைத்த 1000 ஆண்டுகள் பழமையான சோழர்கால ஆலயம் !

நண்பர்கள் தினத்தன்று வெங்கடாசலபுர இளைஞர்கள் இணைந்து ஏரிக்குச் செல்லும் பாதையில் 1000 வருடங்கள் பழமையான சோழர்கால சிவாலையத்தையும், அதை சுற்றி இருந்த சீமைகருவேல முல்லை அழித்தும் சுத்தம் செய்தனர். இம்மண்டபத்தின் அருகில் இருக்கும் செக்குகல்வெட்டு இக்கோயில் சோழன்பரகேசரிவர்மன் (முதலாம்பராந்தகன் (அ) உத்தமசோழன் கி.பி 911 (அ) 974) ஆட்சிகாலத்தில் கட்டப்பெற்றது

இக்கல்வெட்டு இங்கிருந்த சிவன் பெயர் பூந்துறைதேவர் என்றும், இங்கு இருந்த இலுப்பை மரங்களில் இருந்து விதைகள் சேகரிக்கப்பட்டு, அவ்விதைகளை செக்கில் இட்டு, அதில் வரும் எண்ணையினை இங்கிருந்த சிவனுக்கு முழுக்கு செய்வதற்காக இச்செக்சினை கொடுத்ததையும் எடுத்துக் கூறுகிறது.( ஆவணம்-16) வண்டியின் வாடகையை ஏற்றுக் கொண்ட சசிகுமார் அவர்களுக்கும், சுத்தம் செய்ய வந்த அனைத்து இளைஞர்களுக்கும் நன்றி.

படங்கள் : .பெரியசாமி ஆறுமுகம்

இளைஞர்கள் இணைந்து சோழர்கால ஆலயத்தை தங்கள் கடும் உழைப்பினால் சீரமைத்துள்ளனர்.

சோழர்கள்

தமிழர் பெருமை

பதிவுகள்

வரலாறு

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *