தமிழையும் தமிழர் பண்பாட்டையும் போற்றி பேணும் ஓர் அயல்நாட்டு துணைப்பாட நிலையம்
தமிழ் எழுத்துகளால் அலங்கரிக்கப்பட்ட சுவர்கள், தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் படங்கள், சிறு நூலகம், விளையாட்டு பொருட்கள் என பார்ப்பவரைக் அகமகிழ செய்கிறது ஜெய் தமிழ்த் துணைப்பாட நிலையம். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் இந்தத் துணைப்பாட நிலையம் சிங்கப்பூர் ஆரம்பிக்கப்பட்டது. நிலைய ஆசிரியர்களின் உழைப்பினாலும் பெற்றோர்களின் ஆதரவினாலும் நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளது இந்த துணைப்பாட நிலையம் .ஈசூன், சூ(ஜூ) ரோங்மேற்கு, தெம்பனிஸ்(ஸ்), சுவாசூகாங் ஆகிய நான்கு இடங்களில் இ துணைப்பாட நிலையம் செயலாற்றி வருகிறது. பாலர் பள்ளி மாணவர்கள் முதல் தொடக்க கல்லூரி மாணவர்கள் வரை சுமார் 300 மாணவர்கள் தீவெங்கும் அமைந்துள்ள நிலையங்களில் பயில்கின்றனர். தமிழ் மொழியில் ஆர்வத்தைத் தூண்ட பற்பல நடவடிக்கைகளில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடு படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி வாரந்தோறும் நிலத்தின் கருப்பொருள் மாறுகின்றது. இவ்வாரம் நமது நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு நாட்டுப்பற்றை வெளிப்படும் வகையில் நிலையம் அற்புதமாக அலங்கரிக்கப்பட்டது. தமிழ் உணர்வுடன் நாட்டுப்பற்றையும் மாணவர்களிடையே மேலோங்க செய்தது. புத்தாக்க வகையில் மாணவர்கள் தமிழ் மொழியைப் பயில்வதை கண்டு உவகையுற்றேன். மற்ற இனத்தவர் இந்த நிலையத்தில் தமிழ் மொழி பயில்கின்றனர் என்பது வியப்பூட்டும் செய்தியாகும். அலுவலகத்தில் தமிழ் நண்பர்களுடன் தமிழில் பேச வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் இங்கு தமிழ் பயில வருகின்றனர் என அறிந்தேன். அவர்களுக்கு எளிய முறையில் பேச்சு தமிழ் கற்றுத் தரப்படுகிறது. நிலையத்தின் வளர்ச்சிக்கு பின்னால் தமிழ் பற்று மிக்க குடும்பத்தின் வியர்வையும் அர்ப்பணிப்பும் அடங்கியிருப்பதை கண்டு வியந்தேன். ஜெய் துணைப்பாட நிலையம் இன்னும் பல வெற்றிகரமான சாதனைகள் புரிய எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நித்தீசுசெந்தூர்
கடல் தாண்டி தமிழையும் தமிழர் பண்பாட்டையும் சீரிய முறையில் போற்றி வளர்க்கும் ஓர் அயல்நாட்டு துணைப்பாட நிலையம்…
அயலக தமிழர்கள்
அயலக தமிழ் செய்திகள்
சிங்கப்பூரும் தமிழும்
நித்திஷ் செந்தூர்