இன்றைக்கும் வாழும் சங்க வழக்குகள் – பகுதி: மூன்று
நமது புகைவண்டி நிலையங்களில் சுமைதூக்குவோர் ஒரு பெட்டியைத் தலையில் வைப்பதற்கு முன்னர், இப்படி அவர்கள் தலையில் அழுத்தாத வண்ணம், உங்கள் மேல் துண்டை வட்டமாகச் சுருட்டி தலையில் வைத்து அதன்மேல் பொருட்களை வைப்பதை பார்த்திருக்கிறோம்.வீதிகளில் காய்கறிக் கூடையைத் தலையில் சுமந்து கொண்டு விட்டு ஒருவர் கூட இவ்வாறு வருவது பார்த்திருக்கலாம். இதுவே சும்மாடு ஆகும்.கிராமப்புற பெண்களானாலும், தம் முதுகில் நீளமாகத் தொங்கும் முந்தானையின் நுனிப்பகுதியை இவ்வாறு சுருட்டிச் சும்மாடு வைத்துக் கொள்வர்.இதனைச் சும்மாடு கட்டுதல் என்பர். இந்த சும்மாடு பண்டைக்காலத்தில் சுமடு; என்று அழைக்கப்பட்டது. மோர் விற்கும் பெண் ஒருத்தி, முதலில் தர்மத்தைக் கயிற்றால் சுழற்றித் தயிர் கடைந்து, மேலாக பொங்கி வரும் நுரை போன்ற வெண்ணெயை எடுத்துக் கொண்ட பின்னர், மோரில் ஒரு பானையில் ஊற்றி தூக்கி சும்மாட்டில் வைத்து மோர் விற்கப் போகும் அழகை பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் இவ்வாறு விவரிக்கிறார். புலிக் குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி ஆம்பிவான் முகை அன்ன கூம்பு முகிழ் உறை அமைதிப் தயிர் கலக்கி நுரை தெரிந்து புகழ்வாய் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ நாள் மோர் மாறும் நன்மா மேனி – பெரும் 157;புலி(யின் முழக்கம் போன்ற) முழக்கத்தையுடைய மத்தினைஆரவாரிக்கும்படி கயிற்றை வலித்து, குடைக் காளான் உடைய வெண்மையான முகைகளை ஓத்த குவிந்த முலைகளையுடைய, உரையினால் கெட்டியாக தோய்ந்த இளம் புளிப்பான தயிரைக் கடைந்து வெண்ணையை எடுத்து(தயிர்)புள்ளி புள்ளியாக தெரிந்த வாயையுடைய மோர்ப் பானை மெல்லிய சுமட்டின் மேல் வைத்து, அன்றைய மோர் விற்கும், நல்லம்மை நிறத்தையுடைய மேனி என்பது இதன் பொருள் சுமடு என்ற இலக்கியச் சொல்லையே இன்றைய பேச்சு வழக்கில் சும்மாடு என்று அழைக்கிறோம்.
முனைவர் ப.பாண்டியராஜா முன்னாள் : துணை முதல்வர், தலைவர்,கணிதத் துறை இயக்குநர், கணினித்துறை அமெரிக்கன் கல்லூரி, மதுரை
சங்க காலம் தொட்டு இன்று வரை நம் வாழ்வியலோடு கலந்திருக்கும் சொல் வழக்குகள் பற்றிய தொடர் கட்டுரை இது.
குறுந்தொடர்
குறுந் தொடர்கள்
தமிழர் பெருமை
ப.பாண்டியராஜா
வாழ்வியல்
நாம்நாள்தோறும் பயன்படுத்தும் வழக்கிலிருக்கும் கலைச்சொற்கள் பற்றிய தொகுப்பு
கலைச்சொற்கள்
தமிழர்
தமிழர் பெருமை
தமிழ்