தஞ்சை பெரியகோயில் ஓவியத்தில் காணப்படும் அழிந்து போன அலங்கு நாய்
தஞ்சை பெரிய கோவிலின் உள் திருச்சுற்றில் கண்ணைக்கவரும் சோழர் கால ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த ஓவியங்கள் காணப்படும் கம்பீரமான நாயின் உருவம், தஞ்சை மற்றும் திருச்சி பகுதியில் ஒரு காலத்தில் காணப்பட்ட அலங்கு நாய் இனம் எனத் தெரியவருகிறது. உலகப்புகழ் பெற்ற விலங்கியலாளர் டெஸ்மாண்ட் மோரிஸ் எழுதிய குறிப்புகளை இப்படத்தோடு ஒப்பிட்டு நோக்கும் போது, இப்படம் அலங்கு நாய் தான் என்பது உறுதியாகிறது. கோயில் உள் திருச்சுற்றில் வரையப்படும் அளவுக்கு அந்த நாய் தகுதி பெற்றிருந்தது அதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. தமிழ்நாட்டு நாய் இனங்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது அலங்கு. வீட்டுக்கு பாதுகாவலுக்கு அலங்கை மிஞ்சிய நாய் இனம் இல்லை; என்று நாய்கள் குறித்து தான் தொகுத்த அகராதியில் டெசுமண்ட்மோரிச் எழுதியுள்ளார். தி நேக்கட்ஏப் என்ற பிரபலமான புத்தகத்தை எழுதியவரும் டெசுமாண்ட்மோரிசு தான். இன்று பேருக்கு கூட ஒரு அலங்கு கிடையாது. வெளிநாட்டு நாய்களின் மோகத்தில், இந்திய நாய் இனங்கள் அலட்சியம் செய்தால் நம் நாட்டைச் சேர்ந்த நாய் இனங்கள் மெதுவாக அழிந்து போயின. அவற்றில் முக்கியமானது அலங்கு. அந்த இடத்தைப் பார்த்த வெகு சிலர் உள்ளனர். முன்னாள் அமைச்சர் வரலாறு, கல்வெட்டு, ஓவியங்கள் மிகவும் ஆர்வம் உடைய வருமான தங்கம் தென்னரசுவின் இந்த ஓவியத்தின் நகல் ஒன்று இருந்தது. இது குறித்து பேசும்போது, ஏற்கனவே வரையப்பட்டிருந்த சோழர் கால ஓவியங்களின் மேல் நாயக்கர் காலத்தில் வேறு ஓவியங்கள் தீட்டி விட்டார்கள். தற்செயலாகத்தான் பழைய ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்றார் தங்கம் தென்னரசு. இராணிப்பேட்டையில் அரசு கால்நடை மருத்துவராக பணியாற்றுபவர், இந்திய நாய் இனங்கள் குறித்து தகவல்களைச் சேகரித்து வைத்திருப்பவரும் கிஷோர்குமார், இந்தியாவில் இயற்கையாக பரிணாம வளர்ச்சி அடைந்த நாய்களுக்குக் காதுகள் நிமிந்து தான் இருக்கும் என்கிறார். இந்த வகை நாயின் உடல் அமைப்பு குறித்து விளக்கும் டெசுமாண்ட்மோரிசு, இது 27 அங்குலம் உயரம் கொண்டது என்றும் நல்ல உடற்கட்டும், தசைப்பிடிப்பு கொண்டு கால்களை உடையது மற்றும் அதன் காதுகள் எப்போதுமே நிமிர்ந்து நிற்கும் தன்மையை கொண்டு என்றும் குறிப்பிடுகிறார். இந்த ஓவியத்தில் காணப்படும் அலங்கு நாயின் காதுகள் நன்றாக நிமிர்ந்து நிற்கின்றன. கூடவே அது தனது நெஞ்சை நிமிர்த்திய படியும் நிற்கிறது. அலங்கு வகை நாய் முதுகு மீண்டும், வால் நன்றாக வளைந்து காணப்படும். நடக்கும் போது நீட்டித்தது எட்டுகளை எடுத்து வைத்து நடக்கும். இதன் உடல் செவலை, கருப்பு மற்றும் நன்றாக வெளிறிய மஞ்சள் நிறங்களில் காணப்படும். சில பெண்களின் மார்பு பகுதியில் வெள்ளை நிற புள்ளிகள் கூட இருக்கும். பெரும்பாலான ஆண்களின் முகம் கருப்பாக இருக்கும். எந்த நிறமாக இருந்தாலும் முடி இல்லாதது போல் உடல் பளபளவென்று இருக்கும் என்று இந்த நாயை நேரில் பார்த்திருக்கும் சிலர் கூறுகின்றனர். தமிழக நாய்களைப் பொறுத்தவரை ராஜபாளையம், சிப்பிப்பாறை ஆகிய இரண்டும் நாயக்கர் ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு வந்த நாய் இனங்களாகும். தமிழகத்துக்கே உரித்தான இன்னொரு வகை நாய் கோம்பை. ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை ஆகிய மூன்று நாய் இனங்களும் அழிவில் இருந்து தப்பி பிழைத்தாலும், அலங்கு வகை நாயினம் முற்றிலும் அழிந்து போனது. அதேபோல் செங்கோட்டை நாய் என்ற இனம் குறித்து டெசுமாண்ட்மோரிச் எழுதியுள்ளார். இரண்டு செங்கோட்டை நாய்கள் சேர்ந்து ஒரு புலியை வேட்டையாட வல்லவை. இப்படி வேட்டையாடும் போது, அவை தங்கள் உயிரை இழப்பது உண்டு. செங்கோட்டை நாய்கள் தூரத்து உறவினராக கோம்பை நாய் இனத்தைக் குறிப்பிடலாம் என்கிறார் டெசுமாண்ட்மோரிச். பாகிஸ்தானின் சிந்து பகுதியில் அலங்கு நாயினம் அழிந்துப் போன அலங்கு நாயினத்தினைப் போன்றே அதே பெயரில் வழங்கப்படும் நாயினம் இன்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் இந்தியாவின் அரியானா பகுதிகளில் அரிதாக காணப்படுகிறது. அங்கு புல்லி குத்தா என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அலங்குமச்தீப் அல்லது தென்னிந்திய மஸ்தீப் அல்லது சிந்துமச்தீப் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இவற்றில் பல கலப்பினமாக உருவாகிவிட்டன கலப்பின மற்ற அலங்கு மஸ்தீப் நாய்களின் உயரம் 32-40 அங்குலம்,எடை150-170பவுண்டுகளிலும் இருக்கும்.பெண் நாய்கள் சற்று சிறியதாக 28 – 36 அங்குல உயரத்தில் காணப்படும்.
அவர்கள் இதன் பிறப்பிடம் உறுதியாக சொல்ல இயலாதது இந்தியா என்று தெரிவிக்கின்றனர். ஆனால் தஞ்சாவூரை பிறப்பிடமாகக் கொண்ட இந்த நாய்கள் தஞ்சை அரச குடும்பங்களின் வீழ்ச்சிக்கு பிறகு அழிந்து போயிருக்கலாம் என்று ஆங்கிலேயர்களால் இங்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும் நாய்கள் ஆர்வலரான ராசி பிரதி வர்மா தெரிவிக்கிறார்.
ஒரு காலத்தில் கரடிகளை வேட்டையாடவும் இந்த நாய்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தற்காலத்தில் வசதியான உழவர்களாலும், வேட்டைக்கு செல்பவர்களும் பெருமளவில் வளர்க்கப்படும் இவ்வின நாய்கள், நாய்ச்சண்டைகளுக்காகவும் வளர்க்கப்படுகின்றன.
பாரசீகத்தின் போர் நாய்கள் அலங்கு
இந்த நாயினம் பின்னாளில் கலப்பினமாக திரிந்து பாரசீகப் போர்ப்படையில் போர் நாய்களாக இருந்திருக்கலாம் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். கி.மு.486 இல் செர்க்சிசு மன்னன் பல அலங்கு இன நாய்களை கிரேக்கத்திற்கு காவல்நாய்களாக பயன்படுத்த கொண்டுவந்ததாக தென்னாப்பிரிக்க அறிஞர் சேனட்கார் குறிப்பிடுகிறார். மாவீரன்.;அலெக்சாந்தர், பேரரசு மன்னனுக்கு எதிரான போரில் இந்த நாய்களை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அலெக்சாந்தர் பாபிலோனுக்கு திரும்பிச் செல்லும் போது அங்கும் இந்த நாய்கள் பரவியிருக்கலாம் என்கின்றனர். உசாத்துணை : தமிழ் இந்து,
அலங்கு
நாய்
மரபு
மரபு கால்நடைகள்
வரலாற்றுக் குறிப்புகள்