ஏழு தமிழர் விடுதலைக்கு, ஏழு இலட்சம் கையெழுத்து-மாணவர் அமைப்புகள் அறிவிப்பு

ஆண்டுகளாக கொடும் சிறை துன்பம் அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், இராபர்ட்பயசு, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு ஏற்கனவே முடிவு செய்து உள்ளது. இதுவே ஒட்டு மொத்த தமிழகமக்களின் உணர்வாகும்.ஆனால் இந்திய மத்திய அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அரசியல் சட்டம் 161வது பிரிவின் படி மாநில அரசே கூட விடுதலை செய்ய அனைத்து அதிகாரமும் உண்டு.ஆக இந்த கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் தமிழக மக்களிடம் ஏழு இலட்சம் கையெழுத்து வாங்க தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் ஒருங்கிணைப்பில் இன்று(3.6.16) சென்னையில் பல்வேறு மாணவர் அமைப்புகள் ஒன்று கூடி பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்த்தப்பட்டது.தமிழ்நாடு மாணவர் நடுவத்தின் சார்பாக தோழர்.லியோஸ்டாலின் பங்கெடுத்தார். தமிழ்நாடு மாணவர் நடுவம் தமிழகத்தின் பல பகுதிகளில் இக்கையெழுத்து இயக்கத்தை எடுத்துச்செல்வோம்.ஏழு தமிழர் விடுதலை கோரிக்கைக்கு வலுசேர்க்க வேண்டியது,தமிழர்கள் நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். நம் கையெழுத்து, விடுதலையின் கருவியாகட்டும்.

ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ஏழுதமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஏழு இலட்சம் கையெழுத்து  : மாணவர் அமைப்புகள்

செய்திகள்

தமிழ்செய்திகள்

நிகழ்வுகள்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *