சங்ககாலத் தமிழ் எழுத்துகள் – 3
அசோகர் கல்வெட்டுக்களில் காணப்படும் பிராமி வரி வடிவத்துடன் ஒப்புநோக்கி இவை பிராமி வரிவடிவத்தை ஒத்துள்ளன என்ற கருத்தை வெளியிட்டவர். 1906 இல் மறுகால் தலைக்கல்வெட்டைக் கண்டுபிடித்து அதைப் படிக்க முயற்சித்தார்.கல்வெட்டுமொழி பாலியாக இருக்க வேண்டும் எனக் கருதினார். கிடைத்த 30 கல்வெட்டுக்களைக் கொண்டு தமிழ் மொழிக்கே உரித்தான சிறப்பு எழுத்துக்களான போன்றவற்றை தமிழ்எழுத்துக்கள் தான் எனச் சரியாக ஊகித்தார். 1924இல் சென்னையில் நடந்த மொழியியல் மாநாட்டில் முதன்முதலாக இவை தமிழ்மொழியைச் சேர்ந்தவையே என ஆணித்தரமாக உரைத்தார்.இதனால் இவர் தமிழ் பிராமியின் தந்தை என அழைக்கப்படுகிறார். தமிழின் சிறப்பு எழுத்தானவை சரியாக ஊகித்தது. பழந்தமிழை (தமிழ்பிராமி) இலங்கை பிராமியுடன் ஒப்பிட்டு இப்பிராமி தென்னந்திய சாயல் ஒத்திருப்பதாகத் தெரிவித்தது 1938 இல் பண்டைத்தமிழ் எழுத்துக்கள் என்ற நூலை வெளியிட்டார். பட்டிபுரோலு பிராமி வரிவடிவத்திற்கும் பிராமி வரிவடிவத்திற்குமிடையே காணப்பெற்ற ஒற்றுமையை முதன்முதலில் கண்டுபிடித்து வெளியிட்டார். ஐராவதம் மகாதேவன் தமிழ் பிராமிகல்வெட்டுகள் காணப்படும் இடங்களுக்கு நேரில் சென்று 1965 இல் தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுக்கருத்தரங்கில் படித்தகட்டுரைகளைத் தொகுத்து 1966இல் என்ற நூலை வெளியிட்டார். 1906இல் கண்டறியப்பட்ட மாங்குளம் கல்வெட்டை 1966இல் முழுமையாகப் படித்துப் பொருள் கூறினார். மாங்குளம் கல்வெட்டில் நெடுஞ்செழியன் மற்றும் வழுதி என்ற சங்ககாலப்பாண்டிய மன்னரின் பெயரைக் கண்டறிந்தார். புகளூர் தமிழ் பிராமி கல்வெட்டைப் படித்து அவற்றில் சேர மரபைச் சார்ந்த ஆதன், இரும்பொறை ஆகிய மன்னர்களின் பெயர்கள் இடம்பெறுவதை முதலில் கண்டறிந்தார். எடக்கல் கல்வெட்டிலுள்ள கடுமி புதச்சேர என்ற எழுத்தை 1995இல் சரியாகப் படித்தார். இதுவே கேரளம் உள்ளிட்ட பண்டைத்தமிழகத்தில் சேர என்ற குலப்பெயரைச் சுட்டும் ஒரே சங்ககாலத் தமிழ் கல்வெட்டாகும். கல்எழுத்துப் பொறிப்புகளுடன் பானைஓடுகள்,காசுகள், முத்திரைகள், மோதிரங்கள் இவை அனைத்திலும் உள்ளஎழுத்துக்களைத் தெளிவுற ஆராய்ந்து அவற்றில் எழுத்துமுறை, வரிவடிவம், மொழியியல்அமைப்பு, சமூகக்கட்டமைப்பு போன்றவற்றைத் திறம்பட ஆராய்ந்ததுடன் பழந்தமிழ்எழுத்துகளின் பெட்டகமாக Early Tamil Epigraphy From The Earliest Times to The 6th Century A.D என்ற நூலை 2003இல்வெளியிட்டார். இந்நூல் ஹார்டுவர்டு பல்கலைக்கழகத்தின் பதிப்பாக வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவர் தொல்லெழுத்துத்துறையில் ஆற்றிய சீரிய பணியைப் பாராட்டும் முகமாய் இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஆர்.பன்னீர்ச்செல்வம் புகளூர் கல்வெட்டில் இடம்பெறும் செல்லிரும் பொறை, பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ போன்ற சேரமரபினரைப் பதிற்றுப்பத்துடன் ஒப்புநோக்கி அவர்களை முறையே 7, 8, 9ஆம்பத்திற்குரிய பாட்டுடைத் தலைவர்களாகக் கூறியுள்ளார்.ஆர்.நாகசாமி 1981இல் திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் ஜம்பை என்ற ஊரில் கிடைத்த கல்வெட்டின் மூலம் அசோகர் கல்வெட்டில் குறிப்பிடப்பெற்றிருக்கும் ஸதிய புதோமலையமான் திருமுடிக்காரியுடன் போரிட்டுத் தகடூரை எறிந்த தலைவன் கடையெழுவள்ளல்களுல் ஒருவரான அதியமானே எனச் சந்தேகத்திற்கிடமின்றி நிறுவினார். அதுவரை ஸதியபுதோயார் என்பது தமிழகவரலாற்றில் புதிராகவே இருந்தது. கா.ராசன்மண்ணடுக்கு ஆய்வுகளின் அடிப்படையில் பண்பாட்டாய்வின் அடிப்படையிலும் குறியீடுகள், சிந்துவெளிபண்பாடு தொட்டு சில வடிவமாற்றங்களுடன் தொடர்ந்து சங்ககாலத்திலும் வழங்கியுள்ளது எனக் குறிப்பிடுகின்றார். தமிழ் பிராமி வரிவடிவம் இக்குறியீடுகளிலிருந்தே வளர்ச்சிப் பெற்றுள்ளது எனக் கூறுகின்றார். இது நாள் வரை சங்கக்காலத் தமிழி கல்வெட்டுகள் சமணர் இருக்கைகளில் மட்டுமே கிடைத்து வந்தன. இதனால் இவ்வெழுத்துக்கள் சமணரால் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கருத்துகள் நிலவின. இந்தியாவிலேயே மிகப்பழமையான தமிழிக்கல்வெட்டு புலிமான் கோம்பை நடுகல்கல் வெட்டே எனப் பறைசாற்றினார். மேலும், புலிமான் கோம்பை நடுகற்கள் கொண்டு தமிழிக்கல்வெட்டுக்கள் சமணருக்கு மட்டுமே உரித்தானவையல்ல. பாமரதமிழனும் எழுத்தறிவு பண்பாட்டைப் பெற்றுள்ளான் என்பதை விளக்கினார். தொல்காப்பியத்தில் இடம்பெறும் ஆகோள் என்ற சொல்லாட்சி இக்கல்வெட்டிலும் இடம்பெறுவதைக் கொண்டு தமிழ் இலக்கியத்தின் காலத்தை மேல்நோக்கிக் கொண்டுச் சென்றுள்ளார். தாதப்பட்டி கல்வெட்டே எழுத்துப் பொறித்து அறியப்பட்ட முதல் நெடு நிலைக்கல்) என்பதை வெளிப்படுத்தினார். தமிழ்எழுத்தின் வளர்ச்சிநிலை: இந்தச் சங்ககாலத் தமிழ் (தமிழி) எழுத்துக்கள் இதுநாள் வரை சுமார் 32 இடங்களிலிருந்து 94 குகைக்கல்வெட்டுகளும் ஏறக்குறைய 25 தொல்லியல் வாழ்விடப்பகுதிகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட பானைகீறல்களும் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன. இவை தவிர முத்திரைகளிலும், மோதிரங்களிலும், காசுகளிலும் இவ்வெழுத்துக்கள் கிடைத்துள்ளன. இவ்வெழுத்துக்களிலிருந்தே பொ.ஆ. 4ஆம் நூற்றாண்டிலிருந்து வட்டெழுத்துக்களும் பொ.ஆ. 7ஆம்நூற்றாண்டில் தமிழ் எழுத்துக்களும் தோற்றம் பெற்றுள்ளன.
முனைவர் மா.பவானி உதவிப் பேராசிரியர்.கல்வெட்டியல் துறை பகுதி
சங்கக்கால எழுத்துகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை. முனைவர் மா.பவானி. பகுதி – மூன்று
கட்டுரைகள்
சங்ககாலத் தமிழ் எழுத்துக்கள்
முனைவர் பவானி
வரலாற்றுக் குறிப்புகள்