சென்னைக்கருகில் 30 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஊர்: கண்டுகொள்ளாத ஊடகங்கள்
அண்மையில் தலைநகர் சென்னைக்கு அருகிலேயே மிக அற்புதமான வரலாற்றுச் செய்திகள் கிடைத்திருக்கும் போது அதை எந்த தமிழ் ஊடகமும் இதுவரை கண்டுக்கொள்ளாத ஒரு வரலாற்றைப் பற்றிசொல்கிறேன் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது பட்டரை பெரும்புதூர். கொற்றலை ஆற்றின் கரையோரம் இக்கிராமம் உள்ளது. பல்லவர் காலத்தில், இக்கிராமம், பெருமூர்என, அழைக்கப்பட்டதாக, பல்லவமன்னன் அபராசிதவர் மன்கல்வெட்டு கூறுகிறது. கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளுக்கு மேல், பழமை வாய்ந்ததாக இக்கிராமம் கருதப்படுகிறது. பட்டரை பெரும்புதுாரில் உள்ள, கோவில்களில் பல்லவர் சோழர் மற்றும் விசயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் இருக்கின்றன. திருவள்ளூர் மாவட்டம், கற்கால வரலாற்று சான்றாக திகழ்கிறது. 50க்கும் மேற்பட்ட கற்கால வாழ்விடங்கள் இப்பகுதியில் உள்ளன. அதிரம்பாக்கம்,குடியம்,வடமதுரை,நெய்வேலி,பரிக்குளம் ஆகிய இடங்களில் நடத்திய தொல்லியல் அகழாய்வுகள், கற்கால மனிதர்களின் வாழ்வியலை எடுத்துரைக்கின்றன இதையடுத்து, அப்பகுதியில் அகழாய்வு செய்தால், பண்டைய தமிழர்களின் வரலாற்றை மீட்டெடுக்க வாய்ப்பு இருக்கிறது என தொல்லியல்துறை தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது
கடந்த, 2015-16ம் ஆண்டு நடந்த, மானியக் கோரிக்கையில் பட்டரைபெரும் புதுாரில் அகழாய்வு மேற்கொள்ள, தமிழக அரசு10 லட்சம் ரூபாயை, ஒதுக்கீடு செய்தது இதனைக் கொண்டு மூன்று மாதங்களுக்கான ஒரு அகழ்வாராய்ச்சி திட்டம் துவங்கியது. பட்டரை புதூரில் நத்தமேடு, ஆனைமேடு மற்றும் இருளந்தோப்பு ஆகிய பகுதிகளில் 12 ஆய்வுக் குழிகளை தோண்டி தமிழக தொல்லியல் துறையினர் கடந்த ஏப்ரல் 22 முதல்ஜூலை 1 வரைஆய்வுகளை மேற்கொண்டனர் இந்த 3 மாத ஆராய்ச்சியின் முடிவில் , 500-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன இதில், 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மூதாதையர் பயன்படுத்திய, இரும்புகாலத்தைச் சேர்ந்த மண்பாண்ட வகைகள் கிடைத்தன. கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகள், இரும்புக்காலத்தைச் சார்ந்த கருப்பு சிவப்பு மட்கலன்கள் (பானைஓடுகள்), மெருகூட்டப்பட்ட கருப்பு மட்கலன்கள், காவிவண்ணம் பூசப்பட்ட மட்கலன்கள், வழவழப்பான சிவப்பு மட்கலன்கள், மூடிகள் ஆகியன கிடைத்துள்ளன. மேலும், இரும்புப்பொருட்கள், கல்மணிகள், செம்புப்பொருட்கள், கண்ணாடிவளையல் துண்டுகள், யானை தந்தத்தினால் ஆன கழுத்து ஆபரணம், சுடுமண்ணால் ஆன மணிகள், பல்வேறு குறியீடுகள் கொண்ட பானைஓடுகள் உள்ளிட்டவையும் இந்த அகழாய்வில் கிடைத்துள்ளன.அடியில் உறை கிணறுபட்டரை பெரும்புதுார் அகழாய்வில், பண்டைய காலத்தில் பயன்படுத்திய உறை கிணறு கண்டறியப்பட்டு உள்ளது. மொத்தம் 23 உறைகளுடன், 24 அடியில் இக்கிணறு அமைந்துள்ளது.
இதன்மூலம், இந்த இடத்தில், பண்டைய காலத்தில் வீடுகள்இருந்தது உறுதிப்படுத்தப் பட்டுஉள்ளது. இதை மெய்ப்பிப்பது போல், அருகிலேயே, பானைகள், சுவர்கள் போன்ற தடயங்களும் கிடைத்தன. தற்போது, இந்த இடத்தை தொல்லியல்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். இங்குமேலும், ஆய்வு நடத்தும் பட்சத்தில், பண்டைய காலத்தில் கட்டப்பட்ட வீடுகள், அதன் அமைப்பு உள்ளிட்ட விவரங்கள் இளைய சமுதாயத்தினருக்கு தெரியவரும். நறும்புகை கலன் பட்டரை பெரும்புதுாரில் நடந்த அகழாய்வில், கூம்பு வடிவத்திலான துளையிட்ட நீண்ட உயரமான பானை கிடைத்தது. இது பழங்கற்காலத்தில், அகில் நறுமண புகைக்காக அமைக்கப்பட்டதாக கூறப்பட்ட கலன்போல் உள்ளது. இதுவரை வடமாநிலத்தில் மட்டுமே, இதுபோன்ற நறும்புகை கலன் கிடைத்ததாக, வரலாற்று பதிவுகள் கூறுகின்றன. ஆனால், தமிழகத்தில் இது போன்ற கலம் கிடைத்தது படடரை பெரும்புதுாரில் மட்டுமே என, தொல்லியல் துறையினர் ஆச்சரியத்துடன் தெரிவித்தனர் பண்டையகாலத்தில் வாழ்ந்தவர்கள், இந்த நறும்புகைகலனில், வாசனை பொருட்களை எரித்து, பயன்படுத்தியது இந்தஅகழாய்வின் மூலம்தெரியவந்துள்ளது. இதுகுறித்து, தொல்லியல்துறை இணைஇயக்குனர் ஆர்.சிவானந்தம்கூறியதாவது: ஏற்கனவே, குடியம் குகையில் பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் கிடைத்து உள்ளன. அதற்கடுத்ததாக, பட்டரை பெரும்புதுாரில் நடத்திய ஆய்வில், இடைகற்காலம், புதியகற்காலம், இரும்புகாலம் மற்றும் வரலாற்று தொடக்ககாலத்தில் பயன்படுத்திய கருவிகள் கிடைத்து உள்ளன. இதில், அனைத்து காலங்களின் வாழ்க்கைமுறை, வரலாற்று தடயங்கள் கிடைப்பது, திருவள்ளூர் மாவட்டத்தில் தான். இந்த அகழாய்வில், இருபக்கமுனையுடைய கல்லால் உருவானகத்திகள் கிடைத்து உள்ளன. இது, தமிழகத்தில் சொற்பமாகவே கிடைத்துஉள்ளன. அடுத்தபடியாக, மூன்று புதிய கற்கால கோடாரிகள், வெளிறிய சாம்பல் நிறத்திலான மண்பாண்டங்கள், தமிழ்பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள், அழகிய வண்ணம் தீட்டப்பட்ட பானைகள், யானை தந்தத்திலான கழுத்தில் அணியும் பதக்கம் போன்ற ஆபரணங்களும் கிடைத்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக தொல்லியல் துறையினர், பட்டரை பெரும்புதூரில் மேற்கொண்ட அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களில் பொருட்களை அண்மையில் பட்டரை பெரும்புதூர் அரசு உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் காட்சிப்படுத்தி அதனை பள்ளி மாணவமாணவிகள் மற்றும்பொதுமக்கள் பார்வையிட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர் சிறப்புக் குறிப்பு சென்னைக்கு மிக அருகே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னதாக உரோமானியர்கள் வந்து தங்கியிருந்து வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கான அடையாளங்கள் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளன. உரோமானியர்கள் வருகையைப்பறை மட்பாண்டங்கள், ரோமானியர்கள் நறுமணபுகைக்காக பயன்படுத்தும் சந்தனம் உள்ளிட்ட வாசனை கட்டைகளை எரிக்கும் கூம்பு வடிவசாடிகள், துளையிடப்பட்ட கூரை ஓடுகள் ஆகிய முக்கிய தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மிக கூடுதல்.எண்ணிக்கையிலான உறைகளை கொண்ட உறை கிணறு ஒன்றும் இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.வரலாற்றுத் தொடக்ககாலத்தை பதிவு செய்யும் தமிழ்பிராமி எழுத்துக் கொண்ட பானை ஓடுகள்இங்கு கிடைத்துள்ளன.இந்தஅகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் யாவும் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை குறிக்கும் பழமையான தமிழ்க்குடியின் சிறப்பை உலகறியச் செய்வோம் !
ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஊர் சென்னைக்கருகே அகழாய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. மறைக்கப்பட்ட வரலாறை உலகறியச் செய்யுங்கள்.