சீனாவில் தமிழ் கல்வெட்டு !

சீனாவில் தமிழர்களின் வணிகம் சீன நாட்டில் காண்டன்

சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயிலில் சீன பேரரசரான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதை குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன் சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்கு கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கி பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீன நாட்டை அடைந்துள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாக செல்ல வேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இந்த வழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு மிகுதியாகப் பயணத் தொலைவு நீளும். மேலும் பயண நேரத்திலும் பல மாதம் கூடிவிடும். எனவே, சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ் பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீன நாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.பாண்டிய அரசகுலமும் குப்லாய் கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். யாரிந்த குப்லாய்கான் குப்லாய்கான் உலகையே நடுங்க வைத்த மங்கோலிய அரசனான செங்கிஸ்கான் பேரனாவான மங்கோலிய அரசர்களின் ஆளுகையில் சீனாவும் இருந்தது. இவன் கி.பி 1260ம் ஆண்டு முடிசூடினான் இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ் பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப் பேரரசின் அரசனாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய் கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இரு நாடுகளுக்கிடையேயான தூதர்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டது. குப்லாய்கானும், சிவனாலயமும் சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில சிலைகள் குப்லாய் கான் என்னும் புகழ்ப்பெற்ற சீன பேரரசரின் ஆணையால் அமைக்கப்பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்கு இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீன பேரரசரின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும். சக யுகம் சித்திரா பவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன அரசரான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதை குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அரிய தமிழ் கல்வெட்டு இதுவாகும்.கல்வெட்டு கூறும் செய்திகள் இவ்விரு பாடல்களும் ஒன்றன் கீழ் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது அப்படியே படித்தால் பொருள் புரியாது. முதல்வரைத் தொடர்ந்து 7-ஆம் வரியையும், பின்னர் இரண்டாம் வரியைத் தொடர்ந்து 8-ஆம் வரியையும் இணைத்துப் படிக்க வேண்டும். இதேபோல் மற்றவரிகளும் படிக்கப் படவேண்டும். அவ்வாறு இணைத்துப் படித்த படத்தைக் கீழே பார்க்கவும்.

வரி 1: ஹர: ஸ்வஸ்திஸ்ரீசகா(த்)

வரி 7: தம் 1203 வது சித்திரை

வரி 2:சித்திரை நாள் ஸ்ரீ செக(சைவர் 8 காயதிருமேனி(க்கு) நன்வரி 3 றாக உடையார்திருக்கத(லீ)

வரி 9:சுரமுடையநாயனரைவரி 4 ஏறியருளப்பண்ணிவர் 10 சம்பந்தப்பெருமாளா

வரி 5 :னதவச்சக்கரவத்தி(கள்).வரி 11 செகசைக்கான் பர்மன்

வரி 6:படி ஓரிரு செய்திகளின் சிறப்பு என்னும் ஆங்கிலத் தொடர்களைக் குறிக்கத் தூய தமிழ்ச் சொல்லான நன்றாக என்பது நின்றது ப்ரதிஷ்டை என்னும் சமற்கிருதச் சொல்லுக்கு ஈடாக அழகிய தமிழ்ச் சொல் ஏறியருள (எறியருளுதல்) இங்கே பயில்கிறது. ஒரு சில கல்வெட்டுகளில் எழுந்தருளுவித்து எனவும் வருவதைக் காண்கிறோம். அடைப்புக்குறிக்குள் உள்ள எழுத்துகள் கல்வெட்டில் (ஒளிப்படங்களில்) புலப்படவில்லை என்பதால் எழுதப்பட்டவை. தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த ஒரு. வணிகக் குழுவின் பெயரும் கல்வெட்டில் காணப்படவில்லை என்பது எண்ணத்தக்கது. நானாதேசிகள், திசையாயிரத்து ஐந்நூற்றுவர் ஆகியன கடல் கடந்து வணிகத்தில் ஈடுபட்ட தமிழக குழுக்கள் ஆகும். கல்வெட்டுச் செய்திகள்.

நன்றி. அறிஞர் திரு.சுந்தரம்

சீன தமிழர்கள்

சீனா

சீனாவில் தமிழ் கல்வெட்டு

மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு

வரலாற்றுக் குறிப்புகள்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *