சிங்கப்பூரில் தமிழ்பள்ளிகள் (ஓர் கண்ணோட்டம்) : சிங்கையில் தமிழ் -II
1916 ஆம் ஆண்டில் சர்ஸ்டாம்போர்டு இராஃபிள்ஸ் பினாங்கிலிருந்து சுமார் 120 இந்தியர்களும் வந்தார்கள். அவர்களின் வருகைக்குப்பின் தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டது. தமிழ்வழிக் கல்விப் பள்ளிகளே தமிழ்ப்பள்ளிகள் என அழைக்கப்பட்டன. தொடங்கப்பட்ட பள்ளி தொடரவில்லை. அதிகமாக மாணவர்கள் இல்லாததே அதற்குக் காரணமாகும். என்றாலும் இந்திய, தமிழ்த் தொழிலாளர்களின் வருகை அதிகரிக்கவே பள்ளுகளும் அதிகரிக்கத் தொடங்கின 1940களில் சுமார் 47 தமிழ்பள்ளிகள் இருந்துள்ளன. இருந்த பள்ளிகள் தொடரவும் புதிய பள்ளிகள் தொடங்காமல் போனதற்கும் பிள்ளைகளின் பற்றாக்குறையே ஆகும். தற்போது ஓரே ஒரு தமிழ்மொழி நிலையம் சிங்கப்பூரில் நீடித்துநிற்கின்றது. அதுதான் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம். சிங்கப்பூரில் இருந்த தமிழ்ப் பள்ளிகளின் பட்டியல்
1)சாங்கி தமிழ்ப்பள்ளி
2)சிறப்பிதழ் அரவிந்தர் தமிழ்ப் பாட சாலை
3)சாங்கித் தமிழ்ப்பள்ளி வளளுவர் தமிழ்ப்பள்ளி
4) இராமகிருஷ்ணமிஷின் பாடசாலைகள் சாரதாதேவி பள்ளி மற்றும் விவேகானந்தர் பள்ளி
5) கலை மகள் தமிழ்ப்பள்ளி
6) ஜாலான்காயு தமிழ்ப்பள்ளி
7) கமலாநேரு தமிழ்ப்பள்ளி
8) செம்பவாங் தமிழ்ப்பள்ளி
9) சிதம்பரனார் தமிழ்ப்பள்ளி
10) சுவாசூகாங் தமிழ்ப்பள்ளி
11) நாகம்மையார் தமிழ்ப்பள்ளி
12) உமறுப்புலவர் தமிழ்ப்பள்ளி
13) தாளமுத்துத் தமிழ்ப்பள்ளி
14) சுதந்திரயோதயம் தமிழ்ப்பள்ளி
15) செயின்ட்ஜார்ஜஸ் தமிழ்ப்பள்ளி
16) பாரதியார் தமிழ்ப்பள்ளி ( ஜாலான்யூனோஸ்17) ஔவையார் தமிழ்ப்பள்ளி
18) நீலாம்பிகை தமிழ்ப்பள்ளி ( துறைமுகம்)
19) கம்பர்தமிழ்ப்பள்ளி
20) பாரதிதாசன்தமிழ்ப்பள்ளி
21) ஈ.வே.ரா. தமிழ்ப்பள்ளி (பிரஞ்சுசாலையில்)
22) தங்கமணிதமிழ்ப்பள்ளி (ரயில்வேசாலையில்)
23) தண்டாயுதபாணி தமிழ்ப்பள்ளி(தேங்சாலையில்)
24) சரஸ்வதி தமிழ்ப்பள்ளி
25) சுபாஷ்சந்திர போஸ் தமிழ்ப்பள்ளி (ரேஸ்கோர்ஸ் சாலை)
26) லூர்து மாதா தமிழ்ப்பள்ளி (சோபிர்ரோட்)
27) விவேகாநந்தாசன் மாக்க சங்கம் பள்ளி
28) தமிழ் சிறுவர் பாடசாலை. சிங்கப்பூரில் இருந்தசாங்கி தமிழ்ப்பள்ளி
29) பசிர்பாஞ்சாங் தமிழ்ப்பள்ளி
30) செம்பவாங்மெத்தடிஸ்ட் தமிழ்ப்பள்ளி
31) சின்னப்பனார் தமிழ்ப்பள்ளி
32) மோகன்குமாரமங்கலம் தமிழ்ப்பள்ளி
33) இராமமூர்த்தி தமிழ்ப்பள்ளி
34) சிங்கைமகா தமிழ்ப்பள்ளி (தேங்சாலை)
35) பகவத்சிங் தமிழ்ப்பாடசாலை
36) வாசுகி தமிழ்ப்பள்ளி
37) விநாயக நந்த தமிழ்ப்பள்ளி சாங்கி தமிழ்ப்பள்ளி மாணவர்கள்
நான் செய்த ஆராய்ச்சியின் படிஇவ்வளவு தமிழ்ப்பள்ளிகளின் பெயர்கள்தான் கிடைத்தன. இன்னும்பல தமிழ்ப்பள்ளிகள் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. இருமொழி கொள்கையை அரசாங்கம் செயல்படுத்தியதும் தமிழ்ப்பள்ளிகள் படிபடியாக மூடப்பட்டன. தற்போது உமறுப்புலவர் தமிழ் மொழிநிலையம் தான் நீடித்து நிற்கின்றது. தொடக்க பள்ளி முதல் தொடக்கக்கல்லூரி வரை தமிழ்பயிலும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
ஆதாரம்: தமிழ் அமுதம் இதழ் (சிங்கை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் சிங்கப்பூரில் இன்னும் தொடரந்து செயல்படும் ஒரே தமிழ் நிலையம், அது உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம். மொழி எங்கள் விழி; பண்பே எங்கள் வழி என்ற கொள்கை முழக்கத்துடன் இந்நிலையம் தமிழ்மாணவர்களுக்குத் தமிழைக்கற்கும் நிலையமாக விளங்கி வருகின்றது. தமிழ்கற்றல் கற்றப்பிதலை மட்டும் நோக்கமாக இல்லாமால் பல்வேறு தமிழ்மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் இங்குநடைப் பெறுகின்றன. தொடரும்.
“நித்திசுசெந்தூர்
சிங்கப்பூரில் தமிழ் பள்ளிகள் பற்றிய ஓர் கண்ணோட்டம். சிங்கையில் தமிழ் குறுந்தொடரின் இரண்டாம் பகுதி.
அயலகதமிழர்கள்
அயலக தமிழ்செய்திகள்
குறுந்தொடர்கள்
சிங்கப்பூரும்தமிழும்
சிங்கப்பூர்
நித்திசுசெந்தூர்