தமிழகத்திற்கு ஆதரவாக கனடா, பிரான்சு, இங்கிலாந்தில் போராட்டம் : களமிறங்கிய ஈழத்தமிழர்கள் !
காவிரி சிக்கலினால் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் வெகு சாதாரணமாக கன்னட அமைப்புகளால் கடந்த வாரம் நடந்தேறின. தமிழகத்திலும் பல்வேறு அமைப்புகள் கர்நாடகாவை கண்டித்து போராட்டங்கள் நடத்தின.இப்போராட்டம் ஒன்றில் விக்னேசு என்ற இளையர் தீக்குளித்து மரணமடைந்தார்.இந்நிலையில், உலகெங்கிலும் வாழும் புலம்பெயர். ஈழத்தமிழர்களும் கர்நாடகவினால் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து இந்திய தூதரகங்களின் முன் கண்டன .போராட்டங்களை நடத்தினர். இன்று கனடாவில் கர்நாடாகாவில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறையை எதிர்த்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்திய துணை தூதரகத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டது.கர்நாடகாவில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும்,காவிரி நீர் பிரச்சினையில் வழங்கப்பட்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்த கோரியும்.நேற்று கனடாரொரண்டோ நகரத்தின் நடுவில் அமைந்துள்ள இந்தியத் துணைத்தூதரகம் முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் திரளான தமிழர்கள் குடும்பத்துடன் கலந்துக் கொண்டனர். இதேபோல் செப்டம்பர் 16, வெள்ளிக்கிழமை மாலை 7:00 மணிக்கு கனடாவில் சுகார்ப்புரோவில் (scarborough) அமைந்துள்ள கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் கனடிய தமிழர் தேசிய அவை ஒழுங்கமைத்த வீரத்தமிழன் விக்கினேசுக்கு. கண்ணீர் வணக்க நிகழ்வும், கர்நாடகாவில் காவிரி நதிநீர் சிக்கலில் தமிழர்கள் தாக்கப்பட்ட. செயல்களை கண்டித்தும் தமிழக மக்களோடு கனடா வாழ் ஈழதமிழர்களாகிய நாமும் உரத்து குரல்கொடுக்க இருக்கின்றோம் என்ற உணர்வை வெளிப்படுத்தியும் கண்டன, மற்றும் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. தமிழகத்தை சேர்ந்த தமிழர்கள், மலையகதமிழர்கள், தமிழீழ தமிழர்கள் என்ற பேதங்கள் இன்றி அனைத்து தமிழர்களும் மொழியால் ஒன்றிணைந்து தமிழக உறவுகளுக்கு தோள் கொடுக்க வலிமையாக கண்டன உரைகளைஆற்றினார்கள்.தமிழ்மக்களை தாக்கும் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டு தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.போன்றொரு நிகழ்வு பிரான்சில் நேற்று நாம் தமிழர் பிரான்சு அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கர்நாடகாவில் தமிழர்களைத் தாக்கியும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தியும், தமிழர்களின் உடமைகளை அடித்து நொறுக்கியும், காவிரியில் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தண்ணீர் தர மறுத்து வன்முறையில் ஈடுபடுகின்ற கன்னடர்களையும், வன்முறைகளை தடுக்க தவறிய நடுவண் மற்றும் மாநில அரசுகளை கண்டித்தும் கண்டனப் போராட்டம் நேற்று மாலை இந்திய தூதரகம் அருகாமையில் நடைபெற்றது. இதில் பிரான்சு வாழ் தமிழர்கள் பலர் கலந்து கொண்டனர். கர்நாடகாவில் தமிழர்களைத் தாக்கியும், தமிழக பேருந்துகளை அடித்து நொறுக்கியும், காவிரியில் தமிழர்களுக்கு தண்ணீர் தர மறுத்தும் போராடுகிற கன்னடர்களை கண்டித்து பிரித்தானியாவில் வாழும்தமிழர்கள் ஒன்றுகூடி இந்திய தூதரகம் முன் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். காவிரி நதிநீர் உரிமை மீட்பு பேரணியில் தமிழர் உரிமைகளை மீட்க தன்னுயிர் ஈந்த ஈகை மறவன் காவிரிச்செல்வன் தம்பி பா.விக்னேசுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!. – பாவேந்தர் பாரதிதாசன்
தமிழர்களைத் தாக்கும் கர்நாடகாவை கண்டித்து உலகெங்கிலும் ஈழத்தமிழர்கள் கண்டனப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அயலக தமிழ் செய்திகள்
இங்கிலாந்து
கனடா
பிரான்ஸ்
பிரிட்டன்