இன்றைக்கும் வாழும் சங்கவழக்குகள் – பகுதி : ஐந்து

எத்து என்றால் உதை என்று அகராதிகள் பொருள் தருகின்றன. ஆனால் இரண்டும் வெவ்வேறானவை. உதைத்தலுக்கும் எத்துதலுக்கும் என்ன வேறுபாடு? உதைத்தல் என்பது காலை மடக்கி, பின்பக்கம் தூக்கி பாதத்தால் விசையுடன் தாக்குதல். இதைப் பின் பக்கமாகவும் செய்யலாம்.பால் கறக்கும் போது சில பசு மாடுகள் எவ்வாறு உதைக்கும். எத்துதல் என்பது காலை பின் பக்கம் இழுத்து காலின் முன் பகுதி அல்லது கால் கட்டைவிரலை ஒட்டிய பக்கவாட்டுப் பகுதியில் விசையுடன் தாக்குதல். கால்பந்து விளையாட்டின் போது பந்தை தொலைதூரத்துக்கு அனுப்ப இவ்வாறு செய்வார். இந்த ஏத்து என்பதன் இலக்கிய வழக்கு என்று ஆகும். பாய்விரித்து செல்லும் ஒரு நாவாய், நடுக்கடலில் அடித்த பெருங்காற்றால் அலைக்கழிக்கப்படுவதாக அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து காட்டுகிறார் மதுரைக்காஞ்சி புலவர் மாங்குடி மருதனார் பாய்மரத்தை இழுத்துக் கட்டிய வலிமையுள்ள கயிறுகளை அறுத்துப் போடுகிறது கடும் காற்று. படபடவென்று அடித்துக் கிழித்துப் போடுகிறது. கப்பல் நடுவில் நடப்பட்டுள்ள உயரமான பாய்மரம் அடியோடு சாய்கிற அளவுக்கு அதன் அடிப்பகுதியில் ஓங்கி ஒரு எழுத்து வருகிறது. இவ்வாறு சினங்கொண்ட கடுங்காற்று நாற்றிசையும் சுழன்று இருக்கிறது என்கிறார் புலவர் “வீங்குபிணி நோன்கயி று அரீஇதை புடையூ”கூம்புமுதல் முருங்க எற்றிக் காய்ந்து உடன் கடும் காற்று எடுப்பது காற்று மோதிய மோதலில் பாய்மரம் அடியோடு சாய,சாய்ந்து விழுந்தது மட்டுமன்றி, ஓங்கி அடிக்கும் காற்றால் தள்ளப்பட்ட அந்தப் பெரு மரம் சற்றுத் தள்ளி பறந்து போய் விழுகிறது. இதனையே, மோதியதால் கீழே விழுந்த மரத்தை காற்று கால்பந்து போல எற்றித் தள்ளியதாக புலவர் கூறுகிறார்.மிகவும் அருமையான இந்தச் சொல் நுட்பமான பொருள் கொண்டது அல்லவா? அதனைத் தக்க விதத்தில் பயன்படுத்தி தக்க வைத்துக் கொள்வது நம் கடமை அன்றோ! முனைவர்.திரு.பாண்டியராசா

இன்றைக்கு நம்மிடையே வாழும் சங்ககால சொல் வழக்குகள் பற்றிய தொடர். பகுதி ஐந்து – ஏத்துதல்

குறுந்தொடர்

குறுந் தொடர்கள்

தொன்மை சொல்வழக்குகள்

ப.பாண்டியராஜா

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *