சிங்கையில் தமிழ் மொழி
தமிழர்கள் நெடுங்காலமாக சிங்கப்பூரில் வாழ்ந்து வருகின்றனர். சிங்கப்பூரில் உள்ள இந்தியர்களில் பெரும்பான்மையான மக்கள் தமிழர்களே. அதுமட்டுமின்றி தமிழுக்கு அதிகாரத்துவ மதிப்பும் சிங்கப்பூரில் உண்டு. இது நமக்கு கிடைத்துள்ள மிக பெருமையான விஷயமாகும். தமிழ் வானொலியான ஒலி 96.8, தமிழ் நாளிதழான தமிழ் முரசு மற்றும் தமிழ் ஒளிவழியான வசந்தம் ஆகியவை சிங்கப்பூரில் உள்ள முக்கியமான ஊடகங்களாகும். தமிழ் சிங்கப்பூரில் நிலைத்து இருப்பதற்கு இவை மிகவும் துணை நிற்கின்றன. தமிழ் கற்றல் கற்பித்தல் முறைகளும் சிங்கப்பூரில் பல பரிமாணங்களைக் கண்டு உள்ளது. அக்காலத்தில் தமிழ் பள்ளிகள் பல இருந்தனர். அவை மாணவர்களுக்குத் தமிழைக் கற்பித்து கொடுத்தனர். காலப்போக்கில் தமிழ் பள்ளிகள் முடப்பட்டு, தமிழ் மொழியை அந்தந்த தொடக்கப் பள்ளிகளிலும் உயிர்நிலை பள்ளிகளிலும் மாணவர்கள் பயில கல்வி அமைச்சு வழிவகுத்துள்ளது. அனைத்து தொடக்க கல்லூரிகளிலும் மாணவர்கள் தமிழ் பயில முடியும். அடுமட்டுமின்றி ஆண்டுதோறும் தமிழ் மொழி மாதமும் ஏற்பாடு செய்யப்படுகின்றது. இளையர்களிடையே தமிழ் புழக்கத்தை அதிகரிக்க இது பெரிதும் துணைப் புரிகின்றது.
சிங்கப்பூரும் தமிழும்
- சிங்கப்பூரிலுள்ள நான்கு அதிகாரத்துவ மொழிகளில் தமிழும் உண்டு.
- சிங்கப்பூரின் நாணயத்தில் நாட்டின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
- சிங்கப்பூர் என்ற பெயரே தமிழில் இருந்து தான் வந்தது எனக் கூறுகின்றனர். சிங்கம் + புரம் + ஊர் = சிங்கப்பூர்.
- ‘சிங்கைநகர் அந்தாதி’ மற்றும் ‘சித்திரக் கவிகள்’ என்ற நூல்களே இந்த வட்டாரத்தில் முதன்முதலில் அச்சிட்டு வெளியிடப்பட்டன.
- ‘சிங்கைநேசன்’ என்ற வார இதழ் தான் சிங்கப்பூரின் முதல் தமிழ்ப் பத்திரிக்கை.
- ‘கணினி’ என்ற சொல் சிங்கப்பூரில் தான் தோற்றுவிக்கப்பட்டது.
- ‘செல்லினம்’ என்னும் தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் சேவை சிங்கப்பூரில் தான் தொடங்கப்பட்டது.
source : sites.google.com