உலகின் முதல் நாகரீகம் தமிழருடையது : ஆதிச்சநல்லூர் – 1

உலகின் முதல் நாகரீகம் தமிழருடையது. சான்றுகளுடன் குறிப்பிட்டால் நம்புவீர்களா ? ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள், புதையுண்டு கிடக்கும் பூமியில், ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு. தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற இவ்வூர் அமைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தமிழக வரலாற்றில் தனது தொல்லியல் முதன்மையால் இடம் பிடித்த ஊர். இவ்வூர் தாமிரபரணியாற்றின் தென்கரையில், திருநெல்வேலி திருச்செந்தூர்ச்சாலையில் திருவைகுண்டத்துக்கு முன்னர், பொன்னன்குறிச்சி பேருந்து நிறுத்தத்தையடுத்து அமைந்துள்ளது. இவ்வூருக்கு ஆதிச்சநல்லூர் என்ற பெயர் எப்போது எப்படி ஏற்பட்டதென உறுதியாகக் கூற முடியவில்லை. ஆயினும், இப்பகுதியில் கி.பி. 17 ஆம்நூற்றாண்டில் ஆதிச்சநாடாழ்வான் என்ற பட்டப்பெயர் உடைய நிலைமைக்கார நாடார் குடும்பத்தவர் இருந்துள்ளனர் என்பதற்குக் கல்வெட்டு சான்றுகள் உள்ளன. இது ஓர் இடுகாடு. அதாவது, இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு.  ஆதிச்சநல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக்கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அதுமட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நாமறிந்த எந்த இந்திய வரலாற்று காலகட்டத்துக்கும் முந்தையக் காலக்கட்டமக்களின் இடுகாடு இது. தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிறித்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்தமக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் செர்மனி நாட்டைச் சேர்ந்த முனைவர். சாகர் என்பவர்தான். 1876 –ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுப்பிடித்ததுதான் இந்தத் தொல்தமிழர்களது நாகரீகம். அந்தசாகர், தான் கண்டுப்பிடித்தவற்றில் பலவற்றை சான்றுகளுக்காக செர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் செர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கின்றன. பிரஞ்சுநாட்டைச் சார்ந்த லூயிவேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம்ஆண்டு ஆதிச்சநல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருட்களை அவர் பாரீசுக்கு எடுத்துப் போய்விட்டார். இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருட்கள் மேல்நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அப்புதை பொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு பற்றி நமக்கு மேலும் தெரியும். 1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக்கண்காணிப்பாளர் அலெக்சாந்தர்ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்துமிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒருபட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு, அகழ்ந்தெடுத்த பொருட்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார் இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்துவிட்டு வியப்பில் உறைந்து போனார். அந்த வியப்பிற்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள் தான். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள்?அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள்?, அப்படியாயின் இவர்களது நாகரீகம் தான்மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?

ஆதிச்சநல்லூர்-இரும்புக்கருவிகள்-அலெக்ஸண்டர்-ரேயின்-அகழாய்வில்-கிடைத்தவை-ஆதிச்சநல்லூர் இரும்புக்கருவிகள் (அலெக்சாண்டர்ரேயின் அகழாய்வில் கிடைத்தவை பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன்இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கியிருக்கின்றனர். பயிர்த்தொழில், சட்டிப்பானைவனையும் தொழில், நெசவுத்தொழில், கப்பல் கட்டும்தொழில் போன்றவற்றை இரும்புக்கருவிகள் மூலம்திறம் படவளர்த்து கடல்வாணிபம் செய்து உலகப்புகழ் பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்றகருத்துக்கு இந்த அகழ்வாய்வுச்  சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும். மிகத்தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருட்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கை தேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன. மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீசு, மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்தியநாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது. 1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர்ஹீத் என்பவர் தென்இந்தியாவில் செய்யப்பட்டஎஃகுப்பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பாகண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார். மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்ததமிழ் பிராமிகல் வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன்பட்டறை ஒன்று நிறுவி , பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப்பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்சநல்லூர் தான். அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டை ஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்சநல்லூரில்அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆசுத்திரேலிய பழங்குடிமக்களின் மண்டைஓடு என்றும் அவர் கூறியுள்ளார். எனவே தமிழர்களின் முன்னோர்கள் ஆசுத்திரேலிய நாட்டுபழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரிய வருகிறது. அங்குள்ள பழங்குடிமக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம்பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆசுத்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல, குமரிக்கண்டகோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம்.

ஆசுத்திரேலிய பழங்குடிமக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகைஆயுதம் தமிழகத்தில்கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கி விட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம் தான்பூமராங். ஆதிச்சநல்லூரில் கிடைத்ததாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போனபஞ்சாடை ஆகியவைகிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில்நெல், பருத்தி ஆகியவற்றை பயிர்செய்தது மட்டுமல்லாமல் நெசவுத்தொழிலும் செய்து வந்தனர் என்றுஅறிய முடிகிறது. ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு.தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம்மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார் தமிழரின் பெருமை தொடரும்.

ஆதிச்சநல்லூர்

தமிழர் பெருமை

தமிழர் வரலாறு

தொல்பொருள்

நாகரீகம்

முதுமக்கள் தாழி

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *