மூன்றாவது உலகத்தமிழர்கள் பொருளாதார மாநாடு 2016 !

மூன்றாவது உலகத்தமிழர்கள் பொருளாதார மாநாடு சென்னையில் அக்டோபர் மாதம் 1 ஆம்தேதி முதல் 5ஆம் தேதி வரையில் நடைபெற்றது. தமிழர்களுக்கிடையே பொருளாதார மேம்பாட்டில் ஒத்துழைப்பை வளர்க்கவும், மனித மற்றும் பொருள் வளங்களை சேகரித்து அதன்வாயிலாக உயர்வடையும் நோக்கத்திலும் இம்மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. உலகத் தமிழர்களின் பொருளாதார அறக்கட்டளையின் நிறுவனரும், இந்த மாநாட்டின் ஏற்பாட்டாளருமான வி.ஆர்.எசு.சம்பத் கூறுகையில்,

இந்தமாநாட்டின் வாயிலாக தமிழர்கள் உலகளவில் பொருளாதார வகையில் முன்னேறவும், தொழில் தொடங்கவும் இயலும். இங்கு தமிழர்களின் பொருளாதார முன்னேற்றத்துக்குத் தேவையான ஆலோசனைகள் மேற்கொள்ளவும், முதலீடு செய்வதில் போதிய அறிவுரைகளும் பரிமாறிக் கொள்ளலாம் என்றார். இம்மாநாட்டினை கயானாவின் தலைமை அமைச்சரான மோசசு.வீராசாமி தொடங்கி வைத்தார். இவரொரு கயனாவாழ் தமிழராவார். மாநாட்டில், மொரீசியஸ் நாட்டின் துணை குடியரசுத்தலைவர் பரமசிவம் பிள்ளைவையாபுரி, இந்திய நடுவண் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணைஅமைச்சர் பொன்.ராதாகிருட்டிணன், ஐ.நா.வின் பண்பாட்டு உறவுகள் உயர்நிலைப் பிரதிநிதி நசீர்அப்துல்லாசீர் அல்நாசர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

சட்டம் மற்றும் வளர்ச்சி, உலகப் பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள், பொருளாதார அபிவிருத்திக்காக பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர், சுகாதார, மருத்துவமனைகள் மற்றும் அதைச் சார்ந்த சேவைகள் மூலம் வணிகம், முதலீடு, பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள் ஆகிய தலைப்புகள் குறித்து இந்தமாநாட்டில் கலந்தாய்வு செய்யப்பட்டது.

(நன்றி: திரு.சுந்தரம், திரு.கவிக்கோஞானச் செல்வன்)

சென்னையில் உலகத்தமிழர் பொருளாதார மாநாடு நடைபெற்றது. இதில் பல நாடுகளிலிருந்து பலர் கலந்துக் கொண்டனர்.

சென்னை

தமிழ் செய்திகள்

நிகழ்வுகள்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *