சங்ககாலத்தில் போர்களுக்கு போகும் வீரர்கள் சூடிய மலர்கள்
போர்முறைகளில் தமிழர்கள் உலகத்திற்கு வழிகாட்டியாக விளங்கினார்கள் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும், சங்ககாலத்தில் போர்களுக்கு போகும் போது வீரர்கள் சூடிய மலர்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
வெட்சிபூ : நிறைகவர்தலின் போது சூடும்பூ. அதாவது சங்ககாலத்தில் எதிரிநாட்டுடன் போர் புரிய விரும்புவதை சூசகமாக தெரிவிக்க அந்த நாட்டு பசுக்களை கவர்ந்து வருவர், அப்போது வெட்சி பூவை சூடிச்செல்வர்.
கரந்தை பூ : அப்படி எதிரிநாட்டவர் வந்து கவர்ந்து செல்லமுயலும் போது அதை தடுக்க வரும் வீரர்கள் அணிந்திருக்கும் பூவின்பெயர் எதிரிநாட்டுபடையை முற்றுகையிடும் போது சூடப்படும் பூ.
காஞ்சி : போர் நடக்கும் போது போரில் கலந்து கொள்ளாதவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களை காப்பவர்கள் அணிவது.
உழிஞ்சை பூ : எதிரியின் கோட்டையை தகர்க்கும் போது அணிவது. நொச்சி கோட்டையை தகர்க்க வருபவர்களுடன் , போரிடுபவர்கள் அணிவது.
தும்பை : போர் மிக உக்கிரமாக நடப்பதை குறிக்கும் மலர்.
வாகை : வெற்றி பெற்றதை குறிக்கும் மலர்.
பாடாண் : அரசனின் வெற்றியை போற்றி பாடிபரிசில் பெற புலவர்கள் வரும் போது சூடும் மலர்.
தமிழர் வரலாறு
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு