கூகிள் : தமிழில் பேசினால் தட்டச்சு செய்து அசத்தும் புதிய செயலிகள் !

கூகுளின் குரல் வழித்தமிழ் உள்ளீடு இரண்டுநாட்களுக்கு முன் வெளியீடுகண்டது. நீண்ட நாட்களாக இந்த வசதியை எதிர்ப்பார்த்திருந்தவர்களுக்கு இதில் தமிழும் இணைக்கப்பட்டிருந்தது ஒரு நற்செய்தி. குரல்வழி உள்ளிடும் வசதியை, ஆங்கிலம் உட்பட, பலமொழிகளில் கூகுள் ஏற்கனவே வழங்கி இருந்தது.இன்று தமிழோடு, இந்தியா, ஆப்பிரிக்கா நாடுகளில் பேசப்படும் 20 கூடுதல் மொழிகளிலும் இந்த வசதியைச் சேர்த்துள்ளது. இந்தச் சேர்க்கையோடு, 100க்கும் மேற்பட்ட மொழிகளில் குரல்வழி உள்ளிடும் வசதி செயல்படுகின்றது. தட்டச்சுப்பலகை மூலம் அல்லாமல் குரல் மூலமாகவே தமிழை தட்டச்சு செய்ய என்கிற புதிய செயலியை கூகுள் அறிமுகம் செய்திருக்கிறது. 22.MB நிறை உள்ள இந்த செயலி மூலமாக இனி தமிழில் பேசினாலே அது எழுத்தாக தட்டச்சு ஆகிவிடும். முன்பு ஆங்கிலம் மற்றும் வேறு தேசமொழிகளுக்கு மட்டும் இருந்த இவ்வசதி இப்போது ஜி-போர்ட் வழியாக பிராந்திய மொழிகளுக்கும் அறிமுகமாகிறது இந்தியா தமிழ், இலங்கை தமிழ், சிங்கப்பூர் தமிழ் என்று மூன்று பிராந்தியமொழி இசைவுகளை கூகுள் நீங்கள் பேசப்பேச தமிழில் இடுகையிடுகிறது. இதேபோல் தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளில் குரல் தட்டச்சு முறையைக் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் என்று எங்கும் பேசியே எழுத்தைப் பதிவாக்கலாம்.உங்கள் ஆண்டிராய்ட் திறன் பேசியில் பதித்த பிறகு, திறன்பேசியின் பக்கத்தை திறக்கவும்

என்பதை சொடுக்கி திறக்கவும்.

செயலிக்கான படம் இருக்கும். அதை திறந்து கொள்ளவும். பட்டியை சொடுக்கி திறக்கவும். மொழியைத் தேர்வு செய்ய பட்டியில் அழுத்தவும். என்பதை அணைத்து விட்டு, கீழே உள்ள மொழிகளில் செய்து தமிழ் மொழியைத் தேடவும்.

அதில் தமிழ் இந்தியா (தமிழ்) என்கிற மொழிவழியைத் தேர்வு செய்துகொள்ளவும் இதுபோல இலங்கைத் தமிழுக்கும், சிங்கை தமிழுக்கும் அதனதற்கான மொழியைத் தேர்வு செய்து கொள்ளலாம். யார்கண்டார் எதிர்காலத்தில் திருநெல்வேலி, மதுரை, கோவை என்று தனித்தனி வட்டாரமொழி வழக்குக்குகள் கூட இணைக்கப்படலாம்

முந்தைய படத்தில் தமிழ் தட்டச்சுக்கான G தமிழை தேர்வுசெய்யப்பட்டதைக் காட்டும் படம்.

திரும்ப பின்னால் வந்து வாய்ஸ் என்கிற பட்டியை திறக்கவும். முன்னர் தட்டச்சுக்கு மொழியைத் தேர்வு செய்தது போல இப்போது குரல் வழியாகத் தட்டச்சு செய்யவும் செய்து உங்களுடைய மொழியைத் தேர்வு செய்யவும். தமிழ் ( இந்தியா)

இதோ இது போல அவ்வளவுதான் கதை முடிந்தது.

இனி உங்கள் ஆண்டிராய்ட் போனில் பயன்பாடுகளில் எப்படி வாய்ஸ் மூலம் டைப் செய்யச் செய்வது என்று பார்க்கலாம்.முதலில் கீழே உள்ள ஐ சொடுக்கி மொழியை தமிழ் என்று மாற்றிக் கொள்ளுங்கள். பிறகு உள்ள பகுதியை அழுத்தி நிதான உச்சரிப்புடன் பேச ஆரம்பித்தால் உங்கள் சொற்கள் இனி எழுத்தாக மாறும்

நன்றி. நீங்கள் செல்லினம் எனும் செயலி மூலம் திறன் பேசியில் தமிழ் தட்டச்சு செய்பவராக இருந்தால், கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவும். செல்லினம் வழி தமிழில் தட்டெழுதும் பயனர்களுக்குக் கிடைக்கும் நற்செய்தி என்னவெனில், செல்லினத்தைக் கொண்டே நீங்கள் கூகுளின் வசதியைப் பயன்படுத்திக் குரல் வழித் தமிழில் உள்ளிடலாம். இதற்கான கட்டமைப்பு ஏற்கனவே செல்லினத்தில் இருப்பதால், புதிய பதிகையினை நீங்கள் தரவிரக்கம் செய்யத் தேவை இல்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தமிழை உங்கள் குரல்வழி உள்ளிடும் மொழியாக அமைக்க வேண்டியது மட்டுமே. இதனை நமது சிவ தினகரன் கீழ்க்காணும் குறிப்புகளில் விளக்குகிறார். செய்து பாருங்களேன்? தமிழில் தட்டெழுதத் தயங்கியவர்கள், இனி பேசியே தங்கள் எண்ணங்களை எழுத்துகளாக்கலாம். படி நிலைகள் ஓரிரு நொடிப்பொழுதில் சிலபடி நிலைகளில் நாம் செல்லினத்தில் இருந்தே இவ்வசதியினை பெறலாம். ஏற்கனவே செல்லினம் விசைப்பலகையில் ஒலிவாங்கி (மைக்) போன்ற குறியீடு இருக்கும். அதனை அழுத்தினால் அது நேராக கூகுளின் வசதி இருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். அதனை சொடுக்கியதும் இடப்புறமாக ஐக்காணலாம். அதனை தேர்வு செய்யுங்கள். “குரல்வழித்தமிழ் உள்ளீடு”.

குரல் வழித்தமிழ் உள்ளீடு ஏற்கனவே நமக்கு ஆங்கிலம் இருக்கும். இப்போது அதனை விடுத்து தமிழ்மொழியினை தேர்வு செய்ய வேண்டும். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என உங்கள் இருப்பு மற்றும் பேச்சுவழக்குக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான், எப்போது வேண்டுமானாலும் நாம் நேரடியாக ஒலிவாங்கி குறியீட்டினை அழுத்தி தமிழில் பேசினால் அதுவாகவே தமிழில் தட்டச்சாவதை காணலாம்.பல மொழிகளில் வந்துவிட்ட நிலையில் நம் தாய் மொழித் தமிழில் இந்த வசதிவரவில்லையே என்ற ஏக்கம் உலகத்தமிழர்களிடத்தில் இருந்துகொண்டே இருந்தது. அந்த விருப்பம் இன்றளவில் நிறைவேறியது தமிழ் கூறும் நல்லுலகிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது. இன்னும் விரிவாக புரிந்து கொள்ள. காண்க, படங்கள் ஒலி வழி தமிழ் உள்ளீடு முறையில் காற்புள்ளி, முற்றுப்புள்ளி, மேற்கோள் ஆகியன தட்டச்சு செய்வதற்கு மீண்டும் நாம் விசைப்பலகைக்கு மாற வேண்டியுள்ளது. இதெற்கென தனியே இனிவிசைப்பலகை ஏதும் நிறுவத் தேவையில்லை. இனி விரல்வழி உள்ளீடும் சரி குரல் வழிஉள்ளீடும் சரி செல்லினத்திலேயே உங்களுக்கு கிடைக்கும். அனைத்தையும் நிறுவியாகிவிட்டது. இனி எப்படி வாட்சப்பிலும், பேசுபுக்கிலும் இதைசெயல்படுத்துவது காண்க:

ஏதேனும் ஐயம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நன்றி ! (நன்றி: திரு.கார்த்திக் புகழேந்தி, செல்லினம்; நிறுவனர்திரு.முத்துநெடுமாறன், மலேசியா)

இனி நீங்கள் பேசினால் போதும். உங்கள் திறன் பேசி அதனை தமிழ் தட்டச்சு செய்து விடும். இப்புதிய வசதியை கூகிள் அறிமுகப்படுத்தியுள்ளது. செல்லினம் ஏற்கனவே இணைத்துள்ளது. தமிழர் அறிய இதை பகிருங்கள்.

அறிவியல் தமிழ்

கூகிள்

செயலி

செல்லினம்

தொழிற்நுட்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *