கடலுக்கடியில் உறங்கும் தமிழரின் நாகரீகம்
தமிழரின் மிகவும் தொன்மையான துறைமுக நகரமாக காவேரி பூம்பட்டினம் (பூம்புகார்) உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம்… தமிழரின் தொன்மையான பல நூல்களிலும் பூம்புகார் பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளன.ஆனால் அவற்றை மற்றுமே வரலாற்று சான்றுகளாக ஏற்றுகொள்ள முடியாது. ஏனென்றால் பல குறிப்புகள் புனைவாக சொல்லபட்டிருக்கும். அவற்றில் உண்மை எது, புனைவு எது என்று அறிவது கடினம் அப்படியிருக்கும் பொழுது 2002 ஆம் ஆண்டு பூம்புகார் பகுதியில் கடலுக்கு அடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் தொன்மையான பூம்புகார் நகரம் 11600 ஆண்டுகள் முன்பு ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் அழிந்திருக்கக்கூடும் என்றும் அண்மைக்கால நாகரீகத்தின் தொடக்கமாக இந்நகரம் இருந்திருக்கிறது என்றும் பூம்புகாரை ஆராய்ந்த என்பவர் கூறுகிறார். மேலும் அவர் ” பூம்புகார் நகரம் இருந்தகாலம் மற்றும் குமரிகண்டம் அழிந்ததாக சொல்லப்படும் காலமும் ஒரே காலத்தை குறிக்கிறது என்று தனது புத்தகத்தில் கூறுகிறார்.பெங்களூர் மிதிக்சொசைடியில் நடைபெற்ற 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் ஆன்காக் கூறியதாவது:- கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள்பற்றிய வீடியோகாட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளன. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான்கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் ஆன்காக் கருதுகிறார். வீடியோபடத்தில் மண் கல்லான கருவிகள், மனிதஎலும்புகள், வீட்டுச்சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோபடத்தில் பெரிய குதிரைவடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப்பற்றி அறியவந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப்பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும். ‘சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொருகாலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பலகி.மீ. துரத்தில் உள்ளது. இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல்மட் டமாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும். தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவிஅறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது”
1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்
2) நேராகப் பாயும்பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில்காணப்படும் திடீர் வளைவு
3)கடலைச் சந்திக்காமல் திருவெண்ணைநல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு
4)வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரைகாணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்
5) வைகைநதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள்.இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புகடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தெளிவாக விளக்குகிறது. தவிர தமிழகக்கடற்கரையோரம் காணப்படும் கோண்டு வானாபாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது” எனகடல் மட்ட மாறுதல்களும் தமிழகக்கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். (தமிழகஅறிவியல்பேரவை 3-வதுகூட்டம் 1994 மலர்)
1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புகடல்மதுரைவரை பரவி இருந்தது.
2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.
3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.
4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால்இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.
5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும்சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன” என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன் மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பலகடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார். இது பற்றி ஆய்வுகளும் தேவை.
தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம்பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு. நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடி எனப் புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும் போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன்நிறுத்துங்கள்.வாயடைத்துப் போகும் ஆரியம்! நம் வரலாறு உலகில் நிலைநாட்டப்படும்.பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல்மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல்அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சப்பானிய தீவுக் கூட்டங்களிலும் ஆசுதிரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமிகண்காணிப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு கடல்கண்காணிப்படுகிறது. இதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக்சேனல் பலசெய்திகளை வெளிக்கொணர்கிறது. தமிழகக்கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக்நீரிணைப் பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா? இதைப்படித்தவர்கள் என்ன செய்தீர்கள்?
கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளிவகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா? அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமைவாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுகள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா? அறிவியல்அடிப்படையில் நம் நாகரிகச்சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்க வொண்ணாச் சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை? தமிழுணர்வுடன் தலை நிமிர்வோம் ! தமிழர் பெருமைகாப்போம் ! தொடரும்.
சோழர்கள்
சோழர்கள்
தமிழர் பெருமை
தமிழர் வரலாறு
தொல்பொருள்
நாகரீகம்
பூம்புகார்
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு
வரலாறு