உலகில் முதல் முறையாக நாட்டின் பிரதமரான ஒரு தமிழர்
தென் அமெரிக்க நாடான கயானா குடியரசில் சுமார் 8 லட்சம் மக்கள் உள்ளனர். எனினும், விரல் விட்டு எண்ணும் அளவில்தான் தமிழ்க் குடும்பங்கள் உள்ளன தமிழ் பின்புலத்துடன் தொடர்புடைய கயானா மக்களை கயானாத் தமிழர் எனலாம். இவர்கள் தங்களை தற்சமயம் கயானாத் தமிழர்கள் என்று அரிதாகவே அடையாளப்படுத்துகின்றனர். இவர்கள் மதராசி என்றோ அல்லது இந்தோ-கயனீசு என்றோஅடையாளப்படுத்துவது வழக்கம். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலேயர்களால் கயானாத் தோட்டங்களில் வேலை செய்ய வரவழைக்கப்பட்ட தொழிலாளிகளின் வழித் தோன்றிகள் ஆவார்கள். பெரும் பான்மையோருக்குத் தமிழ் மொழி அறிவு இல்லை, ஆனால் பல தமிழ்ப்பண்பாட்டுக் கூறுகள் இவர்களிடம் இன்றும் நிலைத்து நிற்கின்றன. பிரதமர் மோசசு வீராசாமி நாகமுத்துவும் அவர்களில் ஒருவர். இவரது மூதாதையர்கள் தமிழகத்தின் சென்னையை முதற்குடியாகக் கொண்டவர்கள்.ஏறத்தாழ 178 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1838களில் ஆங்கிலேயர்களால் கரும்புத்தோட்டம், விவசாய வேலைகளுக்கு கப்பல் மூலம் கயானாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள். இன்றும் தமிழ்ப்பெயர்களுடன் கயானிசு இந்தியன் எனும் இந்திய வம்சாவளியாக அந்நாட்டில் அழைக்கப்படுகின்றனர். கயானா 1966-இல் சுதந்திரம் பெற்றது. நாகமுத்துகயானாவின் பெர்பிசு மாவட்டத்தில் இந்தியக்கொடி வழித்தமிழ் குடும்பம் ஒன்றில் விம் என்ற ஊரில் பிறந்தார்.ஆசிரியராகவும் பத்திரிகையாளராகவும் பணியாற்றிய இவர் பின்னர் வழக்கறிஞர் ஆனார். 1964 ஆம் ஆண்டில் மக்கள் முன்னேற்றக்கட்சியில் இணைந்து அரசியலில் இறங்கினார். 1992 ஆம் ஆண்டில் அக்கட்சியின் சார்பில் கயானா நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தகவல்துறை அமைச்சராகவும், உள்ளூராட்சி அமைச்சராகவும் பணியாற்றினார். ஆண்டு சூன்20 ஆம்தேதி மோசசு வீராசாமி நாகமுத்துகயானா நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை குடியரசுத்தலைவராகவும் உள்ளார். இவருக்கு கீழ் 25 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் இந்தியா கொடிவழியைச் சேர்ந்த ஒருவரும் அமைச்சராக இருக்கிறார். பிரதமர் நாகமுத்து ஒரு விடுதலைப் போராட்ட வீரர் மட்டுமன்றி, அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் தலைசிறந்த வழக்குரைஞராகவும் திகழ்ந்தவர்.
இது குறித்து அவர் கூறியதாவது எனது மூதாதையர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், அவர்கள் எங்கு பிறந்தனர் என்பது தெரியாது. அதை அறிவதில் மிகவும் ஆவலாக உள்ளேன். அதுகுறித்து ஆய்ந்து தகவல் தெரிவிக்குமாறு இந்தியத் தூதரகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளேன் என்று பிரதமர் நாகமுத்து கூறினார். தமிழ் மீதும், தமிழ்க் கலாசாரம் மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ள பிரதமர், தனக்கு தமிழ் தெரியவில்லையே என்று மனம் வருந்துகிறார். அண்மையில் கயானா நாட்டின் முதல் தமிழராக பிரதமர்ப தவியை மோசஸ்வீராசாமி நாகமுத்து ஏற்றதை அறிந்து, தில்லி தமிழ் வழக்குரைஞர்கள் சங்கத்தின் செயலர் வே. ராம்சங்கர், அவரை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைக் கூறினார். இளம் வழக்குரைஞரான ராம்சங்கர், கயானா பிரதமர் நாகமுத்துவைச் சந்தித்த தனது அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டவை: எனது கல்வி குறித்த விவரங்களைக் கேட்டறிந்த பிரதமர், இணையதளக் குற்றம், பன்னாட்டுச் சட்டம்போன்ற பிரிவுகளைப் பயின்றதைக் கேட்டுப் பாராட்டினார். மேலும், அந்நாட்டில் காவல்துறையினருக்கு இந்திய தண்டனைச்சட்டம், இணையதளக் குற்றம், குறித்து அறிமுக உரை வழங்குமாறும், அதற்கான அரசுமுறையிலான அழைப்பை அனுப்புவதாகவும் கூறினார். நிமிடம் மட்டுமே பிரதமர் அலுவலகம் அனுமதி தந்துள்ளதாக நான் கூறிய போது, நீங்கள் இந்த நாட்டுக்கு என்னைப் பார்ப்பதற்காக 30 மணிநேரம் விமானப்பயணம் செய்துள்ளீர்கள். உங்களுக்கு ஒரு மணி நேரம் கூட நான் செலவிடவில்லை என்றால் நான் தமிழனே இல்லை என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார். மேலும், ஒருமணி நேரத்திற்கும் மேலாக என்னிடம் அளவளாவினார். சந்திப்பின் முடிவில் என்னை வாசல் வரைவந்து வழியனுப்பிய அவரை, நினைத்த போது தமிழர்களின் பண்பாடும், கலாசாரமும் என் நினைவில் நிழலாடியது என்றார் ராம்சங்கர்.
மனைவி சீதாநாக முத்துவுடன் மனைவி சீதா நாகமுத்துவுடன் இதுவரை ஒருநாட்டின் பிரதமராக தமிழர் யாரும் இருந்ததில்லை. சிங்கப்பூரின் குடியரசுதலைவராக நாதன் இருந்துள்ளார். சிலர் துணைப்பிரதமராக இருந்துள்ளனர் அமைச்சராக தமிழர்இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியசு, தென்னாபிரிக்கா, ஃபிசி போன்ற நாடுகளில் இருந்துள்ளனர். ஆனால் பிரதமராக யாரும் இருந்ததில்லை இப்போது முதல் முறையாக தமிழர் ஒருவர் பிரதமராகிறார். தமிழராக இதற்கு நாம் பெருமைப்படலாம்.
கயானா
செய்திகள்
தமிழர்பெருமை
தமிழ்செய்திகள்
மோசசுநாகமுத்து
வரலாற்றுதமிழர்கள்