உலகின் முதல் தமிழ் அஞ்சல்தலை : சிங்கையும் தமிழும்
உலக நாடுகளில் தமிழின் பெருமையும், மேன்மையும் பெரும் பங்களிப்புடன் செய்யும் சிங்கப்பூர் ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி தனது 51 ஆம் தேசிய நாளை கொண்டாடுகிறது. சிங்கப்பூர் தமிழில் முதல் முறையாக அஞ்சல் தலை வெளியிட்ட நாடாக கருதப்படுகிறது. 1990 ஆம் ஆண்டு சிங்கப்பூர் 25 ஆம் ஆண்டு தேசிய நாளை முன்னிட்டு முதல் தமிழ் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது நித்திஷ் செந்தூர் இந்தியாவில் 1960 ம் ஆண்டு திருவள்ளுவரும், 1968 இல் தமிழ் கருத்தரங்கமும் அஞ்சல்தலையில் இடம் பெற்றிருந்தாலும், அதில் தமிழ் முன்னிலை படுத்தப்படவில்லை. 2010 ஆம் ஆண்டு செந்தமிழ் மாநாட்டிற்காக வெளியிடப்பட்ட அஞ்சல் தலையில் கூட திருவள்ளுவர் படத்துடன் தமிழ் சொற்கள் ஏதும் இடம்பெறவில்லை.1966 ஆம் ஆண்டு கம்பருக்கும், 1970 இல் அண்ணாதுரைக்கும், 1978 ஆம் ஆண்டு பெரியாருக்கும், 1980 ஆம் ஆண்டு சர் ராஜா அண்ணாமலை, 1987 ஆம் ஆண்டு முனைவர் ராசா சர் முத்தையா,1989 ஆம் ஆண்டு நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் உள்ளிட்ட பலருக்கும் அஞ்சல் தலைகள் வெளியிட்ட இந்திய அரசு சிறப்பு செய்திருந்தாலும், இதில் எதிலும் தமிழ் இல்லை என்பது குறிப்பிடத்தக்க கொடுமையான விடயமாகும்.அண்ணாதுரை அவர்களின் அஞ்சல்தலையில் அவரின் தமிழ் கையொப்பம் பாதிக்கப்பட்டிருப்பது சிறப்பான ஒன்றாகும். 1961 களில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வி.நவரத்தினம் அவர்கள் தமிழ் அஞ்சல் தலையை வெளியிட்டார் அது அலுவல் பூர்வமான ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.இந்த தரவுகளின் அடிப்படையில் சிங்கப்பூரே தமிழுக்காக அஞ்சல்தலை வெளியிட்ட முதல் நாடாக கருதப்படுகிறது.1960 ஆம்ஆண்டு திருவள்ளுவருக்கு வெளியிடப்பட்ட அஞ்சல் தலை ஆகத்து ஒன்பதாம் தேதி 51 ஆம் ஆண்டு தேசியநாள் காணும் சிங்கப்பூர்வாழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை கற்றது தமிழ்குழு தெரிவித்துக்கொள்கிறது.
தனது தேசிய நாளை முன்னிட்டு தமிழில் அஞ்சல் தலை வெளியிட்ட சிங்கப்பூர்.
அஞ்சல் தலைகள்
அயலக தமிழர்கள்
சிங்கப்பூரும் தமிழும்
சிங்கப்பூர்
தமிழர் பெருமை
தமிழ் அஞ்சல் தலை
தமிழ் செய்திகள்
நித்திஷ் செந்தூர்