பிரான்சில் தமிழக மாணவர் படுகொலை !

பிரான்சில் நேற்று முன்தினம் இரவு தமிழகத்தை சேர்ந்த மாணவரொருவர் கும்பலால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு, கும்பகோணத்தை சேர்ந்தவர் மணிமாறன். மாணவரான இவர் பாரீசிலுள்ள உயர் மின்னணுவியல் கல்லூரியில் மின்னணுவியலில் முதுகலை மேற்படிப்பு படித்து வந்தார்.கடந்த வியாழனன்று பணி முடித்ததும் பாரீசு வட்டம் 15 இல் உள்ள நண்பரை சந்திப்பதற்காக. மெட்ரோவிற்கு ஏறக்குறைய இரவு 11.30 மணியளவில் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சிலர் அவரிடமிருந்த கைப்பேசியை பறித்ததாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் அவரை கத்தியால் குத்திவிட்டு அவர்கள் தப்பியோடி விட்டதாகவும் கூறப்படுகிறது. நெஞ்சு மற்றும் வயிறு என. 3 இடங்களில் கத்திக்குத்து விழுந்ததில் படுகாயமடைந்த மணிமாறன் 12 மணியளவில் இலிருந்து 15 நிமிடதூரத்திலிருக்கும் நண்பரின் அடுக்குமாடி இருப்பிடத்திற்கு சென்று அழைப்பு மணியை அழுத்திய நிலையில் வாயிலில் நிலை குலைந்து சுருண்டு விழுந்துள்ளார். இதனைக் கண்ட. அவரின் நண்பர்கள் ஆம்புலன்சை அழைத்ததுடன் மற்றவர்களையும் உதவிக்கு அழைத்துள்ளனர். முதலுதவி மேற்கொண்ட போதும் மிகுந்த அவசர நிலையில் மணிமாறனை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் அவர் இறந்துவிட்டதாக மறுநாள் (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளனர். உடன் சம்பவ இடத்திற்கு வந்தகாவல்துறையினர் நிகழ்விடப் புலனாய்வு மேற்கொண்டனர்.அவரது கைப்பை கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவர் கைப்பேசி மட்டும் காணாமல் போயிருப்பதால் வழிப்பறியின் போது ஏற்பட்ட தகராறில் மணிமாறன் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து பிரெஞ்சு காவல்துறையினர் குற்றவியல் புலனாய்வு செய்து வருகின்றனர். .

மேலும் கொலை செய்யப்பட்ட. மணிமாறன் மாணவரென்பதால் இந்தியதூதரம் தலையிட்டு அவர் உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இச்சம்பவம் பிரான்சு வாழ் இந்திய மாணவர்களிடையே பதற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.பிரான்சில் கடந்த சில மாதங்களில் இந்தியர்கள் கொல்லப்படும் நிகழ்வு நடைபெறுவது இதோடு மூன்றாவது முறையாகும்.

பிரான்சில் பாரீசுநகரத்தில் தமிழக மாணவர் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பிரான்சில் கடந்த சில மாதங்களில் இந்தியர்கள் கொல்லப்படும் நிகழ்வு நடைபெறுவது மூன்றாவது முறையாகும்.

அயலக தமிழ்செய்திகள்

தமிழ்செய்திகள்

பிரான்சு

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *